For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியர்கள் 5-ல் ஒருவருக்கு சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம்- ஆய்வு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

BP Check up
இந்தியாவில் 5-ல் ஒருவர் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்றில் ஒருவர் இந்த இரண்டு நோயினாலும் தாக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

சைட் எனப்படும் ஸ்கிரீன் இன்டியா டுவின் எபிடெமிக் அமைப்பு இந்தியர்களை பாதிக்கும் நோய்கள் குறித்த மிகப்பெரிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டது, அந்த ஆய்வு முடிவு திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஐந்தில் ஒருவர் பாதிப்பு

இந்தியாவில் 60 சதத்தினர் அதாவது ஐந்தில் ஒருவர் நீரிழிவு அல்லது உயர் ரத்தஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் மகாராஷ்டிராவில் 67 சதவிகிதத்தினர் நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். 40 சதவிகிதத்தினரை சோதனை செய்தபோது 40 சதவிகிதம் பேர் நீரிழிவு மற்றும் உயர்ரத்த அழுத்தத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 8 மாநிலங்களில் எடுக்கப்பட்ட சர்வேயின் படி பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது நோய் பற்றிய விழிப்புணர்வு மகாராஷ்டிராவில் குறைவாகவே உள்ளது தெரியவந்தது. இந்தியா முழுவதும் 7 சதவிகிதத்தினர் தங்களுடைய நோய் பற்றிய விழிப்புணர்வு அன்றி இருக்கின்றனர். மகாராஷ்டிராவில் 5 சதவிகிதத்தினர் நோய்பற்றி அறியாமையிலேயே இருக்கின்றனர்.

எட்டு மாநிலங்கள்

எட்டு மாநிலங்களில் நகர்புறங்களில் வசிக்கும் 16 ஆயிரம் மக்களிடம் மூன்று ஆண்டுகளாக சோதனை செய்யப்பட்டது. அவர்களில் 60 சதவிகிதத்தினர் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்தஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டதாக சைட் அமைப்பின் தலைவர் டாக்டர் சசாங்ஜோசி தெரிவித்துள்ளார்.

நோய் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் பலரும் ரெகுலராக ரத்த சர்க்கரை, மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்களாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் பலரது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 7 சதவிகிதம்தான் இருந்துள்ளது. கெட்ட கொழுப்பின் அளவு 100 மி.லி கிராம் அளவிற்கு இருந்து. ஏராளமானோர் ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருப்பதும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

விழிப்புணர்வு அவசியம்

நம்முன் உள்ள மிகப்பெரிய சவால் என்னவெனில் இதில் 7.2 சதவிகிதத்தினர் தங்களுக்கு சர்க்கரை மற்றும் உயர் ரத்தஅழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து அறியாமல் இருப்பதுதான். 18.4 சதவிகிதத்தினர் முன் பரிசோதனை குறித்து விழிப்புணர்வு இன்றி இருக்கின்றனர் என்றும் டாக்டர் ஜோஷி தெரிவித்துள்ளார்.

மாறிவரும் உணவுப்பழக்கமே இதுபோன்ற நோய் பாதிப்பிற்கு காரணம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நோய் பற்றிய விழிப்புணர்வும், அதனை கட்டுப்படுத்துவது குறித்த தெளிவும் இருந்தால் நம்மை நோய் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

English summary
One in every five Indian adults living in urban cities suffers not only from hypertension but also diabetes. In Maharashtra, more disturbingly, one in three persons is struck by the twin epidemic. These are some of the highlights of India's largest clinic-based survey to assess the prevalence of diabetes and hypertension. The findings of the study, called Screening India's Twin Epidemic (SITE), were announced on Monday in Mumbai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X