டெல்லியில் வாலிபரிடம் ரூ. 45 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் : வாலிபர் கைது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் ஹெராயின் போதைப்பொருளுடன் சுற்றித் திரிந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ. 45 லட்சம் மதிப்புள்ள 450 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது,
நேற்று சகிருத்தீன் (24) என்னும் வாலிபர் கன்னாட் பகுதியில் போதைப்பொருள் விற்க வந்தார். அப்போது அவரை கையும், களவுமாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பிடித்தனர்.
அந்த வாலிபர் பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர். அவர் அங்கிருந்து ஹெராயினை எடுத்த வந்து டெல்லியில் விற்பனை செய்து வந்துள்ளார் என்றார்.
இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications