ஷார்ஜாவில் நடந்த தமிழ்த்துளி அமைப்பின் தீபாவளி கொண்டாட்டம்

தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய தமிழ்த்துளி அமைப்பின் தீபாவளி கொண்டாட்டத்திற்கு நிறுவன தலைவர் பிரியா விஜய் தலைமை தாங்கினார். மஹேஸ்வரி தமிழ்ச்செல்வன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
குட்டீஸ்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து ஆங்கிலச் சொற்களுக்கான தமிழாக்கச் சொற்கள், வார நாட்களின் பெயர்கள், தமிழ் மாதங்களின் பெயர்களை மாணவ, மாணவியர் கூறினர்.
இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் டாக்டர் சாந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். குட்டீஸ்களின் தமிழார்வம் தன்னை வியக்க வைப்பதாக தெரிவித்தார். அமீரகத்தில் தமிழ்வழிக் கல்வியினை கற்க இயலாத சூழலிலும் தமிழ் மொழியில் சிறப்பாக தங்களது திறனை வெளிப்படுத்திட தளம் அமைத்துத் தரும் தமிழ்த்துளி அமைப்பிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நடன ஆசிரியை கவிதா பிரசன்னா பட்டிமன்றப் பேச்சாளர் வஹிதா ஜெய்தியால் கௌரவிக்கப்பட்டார்.
அமீரக நகைச்சுவையாளர் மன்ற தலைவர் சுரேஷ் போட்டிகளை நடத்தினார். நன்றியுரைக்குப் பின்னர் இரவு உணவு வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications
