துபாயில் மஸ்னவி ஷரீப்பின் இரண்டாம் பாகம் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

Masnavi's Sharif's Tamil translation(part II) released in Dubai
துபாய்: துபாயில் ஆத்மஞானி அல்லாமா ஜலாலுத்தீன் ரூமி ( ரஹ்) அவர்களின் ஞானக்கருவூலம் மஸ்னவி ஷரீப்பின் இரண்டாம் பாகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா கடந்த 8ம் தேதி மாலை தேரா துபாய் நாசர் சதுக்கத்தில் உள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

துவக்கமாக முஹம்மது இஸ்மாயில் பிலாலி இறைமறையை ஓதி நபிபுகழ் பாடல் பாடினார். விழாவுக்கு அல்ஹாஜ் ஹெச்.எஸ்.சி. செய்யது அப்துல் காதர் தலைமை தாங்கினார். மௌலானா ஜலாலுத்தீன் ரூமி குறித்த குறிப்பினை கிளியனூர் இஸ்மத் வழங்கினார்.

ஜலாலுத்தீன் ஃபஹ்மி தனது துவக்கவுரையில் மஸ்னவி ஷரீப்பின் தமிழாக்கம் வெளிவர மூலகாரணமாக இருந்த ஹஜ்ரத் காஜா ஃபஹிமுல்லாஹ் ஷா ஜிஸ்தியுல் காதிரி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் ‘மஸ்னவி- ஒரு பார்வை’ எனும் தலைப்பில் ஆன்மீக உரை நிகழ்த்தினார்.

மஸ்னவி ஷரீப் இரண்டாம் பாகத்தின் முதல் பிரதியை முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் வெளியிட ஹெச்.எஸ்.சி. செய்யது அப்துல் காதர் பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பசிபிக் மீரான், தைக்கா சுஐபு நாசர், ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குற்றாலம் ஏ. லியாக்கத் அலி, செம்பி யாசின், திட்டச்சேரி மௌலவி டாக்டர் ஷேக் முஹம்மது ஆலிம், கிளியனூர் இஸ்மத், சிங்கப்பூர் தமிழ்ச் சங்க தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

முஹம்மது முஸ்தபா இறைகீதம் பாடினார். காயல் நூஹு சாஹிப் நன்றி கூறினார். கீழை ராஜா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மௌலானா ஷரீப் ஆலிம் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஹஜ்ரத் காஜா ஃபஹீமுல்லா அவர்களின் அமீரக அன்பர்கள், ஃபஹீமியா ட்ரஸ்ட், சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை, பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகம் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+