துபாயில் பிப். 4ல் அமீரகத் தமிழ் சங்கம் நடத்திய இறகுப்பந்து போட்டி, பேஸ் பெயின்டிங் போட்டி
துபாய்: அமீரகத் தமிழ்ச் சங்கம் சார்பில் கடந்த 4-ம் தேதி இறகுப்பந்து போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் ஏராளமானோர் உற்சாகமாக கலந்து கொண்டு விளையாடினார்.
ஐக்கிய அமீரகத் தமிழ்ச் சங்கம் முதன்முறையாக இறகுப்பந்து போட்டி நடத்தியது. இது தவிர பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும், முக வண்ணம் பூசும் போட்டியும் நடந்தன.
இந்த போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு கடந்த 3-ம் தேதி இரவு 9 மணி முதல் 12.30 மணி வரை பயிற்சி போட்டிகள் நடத்தப்பட்டன. இறகுப்பந்து போட்டி ஆடவர் இரட்டை / பெண்கள் இரட்டை / கலப்பு இரட்டை என தகுதி வாரியாக நடந்தது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
திரு. மல்லிகார்ஜூன், திருமதி. கீதா, ஸ்ரீராம், திருமதி. காமாட்சி ஆகியோர் இந்தப் போட்டியை ஒருங்கிணைத்து நடத்தினர். இவர்களுக்கு உறுதுணையாக திரு.பிரபு, திருமதி. மாரீஸ்வரி பிரபு, திரு. பாலகிருஷ்ணன், திரு. சாகுல் அகமது, திரு. ஆண்டனி நிக்சன் அனைவரும் சிறப்பாக செயலாற்றினார்கள்.
முதல் போட்டி கடந்த 4-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. இறுதி போட்டி இரவு 8.15 மணிக்கு நடைபெற்றது.
முக வண்ணம் பூசும் போட்டி நடத்தப்பட்டது. அதில் 30 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கு பெற்று மகிழ்ந்தனர். இந்த போட்டியை திரு.ஷோபன் மற்றும் திருமதி ஜமுனா ஷோபன் ஆகியோர் ஒருங்கிணைத்தார்கள்.
பாசிங் த டாய், கொல கொலயா முந்திரிக்கா, தொடர் ஓட்டம், வண்ணங்கள், வேடிக்கை இறகுப் பந்து, கொகோ என 2 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
15 வயதிற்கு மேற்பட்டோர் ஆண்களுக்கு மிதவேக நடை, அடுத்தவனை அலேக்கா தூக்கு, குதியாட்டம், கொகோ நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பெண்களுக்கான 15 வயதிற்கு மேற்பட்டோருக்கு குப்பி நிரப்புதல், குவளை பாலன்சிங், பந்து எரிதல், பிஸ்கட் தின்னுதல் மற்றும் கொகோ நடந்தன. இவற்றை திருமதி ஸ்ரீரங்கா ரமேஷ் மற்றும் திருமதி.சித்ரா பிராஸ்பர் ஆகியோர் சிறப்பாக நடத்தினர்.
திருமதி.சௌம்யா, திருமதி.கோகிலா, திருமதி. கீதா சுவாமிநாதன், திருமதி.விஜயா, திருமதி.காயத்ரி, திருமதி.அனிதா முத்து, திரு.நந்தகுமார், திரு.மகாதீர், திரு.கார்த்திகேயன், திரு.ஸ்ரீமான், திரு.ரவி, திரு.ராம்குமார் மற்றும் அமீரகத் தமிழ்ச சஙக ஆதரவுக் குழு (UTS ஸ்கவுட்ஸ் மற்றும் UTS கைட்ஸ்) ஆகியோர் ஒருங்கிணைப்பில் உதவியாக இருந்தனர்.
குலுக்கல் சீட்டில் வென்றோருக்கு பேக் டூ பேக் சூப்பர் மார்க்கெட் அல் நாதா பரிசு வழங்கியது.
போட்டியின் நினைவுக் கோப்பைகளை திரு.பிராஸ்பர் வழங்கினார். திரு.ராம்குமார், திரு.தலவை மற்றும் குழுவினர் ஆகியோர் பேருதவியாக இருந்தனர்.
பங்கெடுத்துக் கொண்ட மொத்த குழுக்கள்:
ஆடவர் இரட்டை : 22 அணிகள் (44 வீரர்கள்)
பெண்கள் இரட்டை: 12 அணிகள் (22 வீராங்கனைகள்)
கலப்பு இரட்டையர்கள் : 22 அணிகள் (44 வீர வீராங்கனைகள்)
வெற்றி பெற்றோர் விவரம் வருமாறு,
ஆடவர் இரட்டையர் பிரிவு:
வெற்றி பெற்றோர்
திரு. அழகப்பன், திரு. முஹமது அன்வர்
இரண்டாம் இடம்
திரு. ஸ்ரீராம், திரு. துர்கா ரமேஷ்
பெண்கள் இரட்டையர் பிரிவு:
வெற்றி பெற்றோர்
திருமதி. காமாக்ஷி, திருமதி. கீதா பாலா
இரண்டாம் இடம்
திருமதி. கீதா கதிர், திருமதி. கீதா மல்லி
கலப்பு இரட்டையர் பிரிவு:
வெற்றி பெற்றோர்
திரு. ஸ்ரீராம், திருமதி காமாக்ஷி ஸ்ரீராம்
இரண்டாம் இடம்
திரு. பிரபு, திருமதி. மாரீஸ்வரி பிரபு
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications