'அமைதிப்பூங்கா'வில் அமைதியில்லை-தமிழகத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள்

Subscribe to Oneindia Tamil

Suicide
கடந்த 2010ம் ஆண்டு அமைதிப் பூங்கா என்று அழைக்கப்படும் தமிழகத்தில் தான் அதிகமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதிலும் இறந்தவர்களில் பெரும்பாலானோர் திருமணமானவர்கள்.

தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 16,561 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும், இந்தியாவில் மணிக்கு 15 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றும் தேசிய குற்ற ஆவண காப்பக அறி்க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கடந்த ஆண்டு 1,325 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் திருமணமானவர்கள்.

அமைதிப் பூங்கா என்று சொல்லப்படும் தமிழகமா தற்கொலையில் முதலிடம் என்று நினைக்கையில் வேதனையாக இருக்கிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் செய்து வைப்பது ஒன்றாக வாழத் தான். எந்நேரம் பார்த்தாலும் எலியும், பூனையுமாய் சண்டை போட்டுக் கொண்டு உங்கள் வாழ்க்கையை நீங்களே அழி்ததுவிடாதீர்கள்.

கணவன், மனைவி என்று இருந்தால் சண்டை, சச்சரவு இருக்கத் தான் செய்யும். அதை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். சண்டை போட்ட வேகத்தில் கணவன் மீதோ அல்லது மனைவி மீதோ இருக்கும் ஆத்திரத்தில் உங்கள் வாழ்க்கையை நீங்கள் முடித்துக் கொள்ளாதீர்கள். அந்த ஒரு நிமிஷத்தில் வேகத்தில் எடுக்கும் முடிவால் நடுத் தெருவில் நிற்பது உங்கள் பிள்ளைகள் தானே.

சண்டை போட்டால் ஒரு இடத்தில் கொஞ்ச நேரம் அமைதியாக அமர்ந்திருங்கள். பிறகு உங்கள் துணையிடம் பேசி சமாதானமாகுங்கள். விட்டுக் கொடுத்து வாழப் பகுங்கள். ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருங்கள். பொறுமையாய் இருங்கள். பிரச்சனை வந்தால் அதற்கு தீர்வு காணுங்கள். தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது.

பிரச்சனை ஏற்படும்போது பொறுமையாக இருந்து தான் பாருங்களேன். நிச்சயம் உங்கள் ஆத்திரம் அடங்கும். முதலில் கணவனும், மனைவியும் நண்பர்களாக மாறுங்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் உங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். மூன்றாவது ஆளைத் தலையிட விடாதீர்கள். கணவன், மனைவிக்குள் நெருக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இனிமையாகப் பேசுங்கள்.

வாழ்க்கை அதிலும் திருமண வாழ்க்கை அழகானது. அதன் அழகை ரசிக்கத் தெரிய வேண்டும். அதற்கு நல்ல ரசிகர்களாக மாறுங்கள். வாழ்க்கை அழகானது, நான் வாழப் பிறந்தவன், பிறந்தவள் என்று அவ்வப்போது உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். இல்லை தற்கொலை செய்து கொண்டால் தான் நிம்மதி என்ற எண்ணத்தை மாற்ற முடியவில்லை என்று தோன்றினால் உடனே ஒரு மனநல மருத்துவரை அணுகுங்கள்.

மனநல மருத்துவரா எனக்கென்ன பைத்தியமா என்று கேட்க வேண்டாம். உங்கள் மனப் போராட்டத்தில் இருந்து நீங்க்ள் வெளியே வர மனநல மரு்ததுவர் உதவுவார். உங்கள் நண்பர்களில் யாரேனும் ச்சே, என்னடா வாழ்க்கை இது வீட்டுக்குப் போனாலே ஒரே சண்டை தான், பேசாமல் செத்துடலாம் போல இருக்கு என்று கூறினால் உங்களால் முடிந்த வரை அவர் தற்கொலை நினைப்பை மாற்றுங்கள். இல்லையென்றால் அவரை கையோடு அழைத்துக் கொண்டு போய் ஒரு மனநல மருத்துவரிடம் விடுங்கள்.

உலகெங்கும் உள்ள தமிழர்கள் பல சாதனைகள் புரிந்து வெளிநாட்டவர்களை தமிழகம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கையில் தமிழகத்தில் வாழும் தமிழர்கள் வாழப் பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்ளலாமா? தமிழர்கள் வீரர்கள் அல்லவா, இப்படி கோழைத் தனமாக தற்கொலை செய்யலாமா? தற்கொலை எண்ணம் கொண்டவர்களில் இந்த கட்டுரையைப் படிப்பவர்களில் ஒருவராவது தங்களது உயிரைத் தக்க வைத்துக் கொண்டால் சந்தோஷம்தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+