ஒரு புன்னகைக்கு 1000 தெளசன்ட்வாலா வெடிக்கும்!

குறிப்பாக காதல் வந்தவர்களுக்கு குறிப்பாக ஆண்கள், பெண்களை விட அதிக் உணர்ச்சிவசப்படுகிறார்களாம். பெண்களை விட அதிகம் யோசிக்கிறார்களாம். பெண்களை விட அதிகம் கவிதை எழுதுவார்களாம்.
நீ பூமியில் சிரித்தால் வானில் மழை வரும்
நீ சிரித்தால் பூக்கள் உதிரும்
உன் இதழ் விரிப்புக்கு என் மனம் துடிக்கும்
உன் ஒரு புன்னகைக்கு என் மனதில் 1000 தெளசன்ட்வாலா வெடிக்கும்
எனக்கு எல்லாமே நீதானே செல்லம்மா!
இப்படி கவிதைகள் எழுதிக் குவிப்பார்கள் காதலர்கள். ஏன் இப்படி திடீர்னு கவிஞராகிட்டீங்க என்று அவர்களிடம் கேட்டால் சரியாக பதில் சொல்ல வராது அவர்களுக்கு. காதல் வந்தது, கூடவே கவிதையும் வந்தது என்றுதான் சொல்ல முடியும் அவர்களால்.
ஜில்லென்று பெய்த மழைக்குப் பின்னர் உன்னைப் பார்த்தேன்
மழையை விட நீதான் அழகு...
தேவதையே!
மழை உன்னை அழகாக்கியதா அல்லது
உன்னைத் தழுவி அது அழகாகிப் போனதா!
என்று புளகாங்கிதப்படுவார்கள். அடடா என்னய்யா ஆச்சு உனக்கு என்று கேட்டால் சிரிப்பார்கள்.
ஆனால் இப்படி இவர்கள் 'சேது' போல மாறிப் போக அவர்களது மூளைதான் காரணமாம். காதலுக்கும், மூளைக்கும் நிறைய நெருக்கம் இருக்கிறதாம். மேலும் காதல் வந்தவர்களுக்கு மூளை மற்றவர்களை விட அதிகம் வேலை செய்கிறதாம்.
இதுதொடர்பாக எடுக்கப்பட்ட ஆய்வில், மூளையின் நரம்புகள் காதல் கொண்டவர்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக புத்துணர்வோடு இருப்பதாக கூறியுள்ளனர்.
காதல் உணர்வுகளுக்கு உட்படும்போது நமது மூளையில் நியூரோஸ்டிரான்ஸ்மிட்டர் டோபோமைன் போன்ற வேதிப்பொருட்கள் சுரப்பு அதிகரிக்கிறதாம். இதுதான் காதல் கொண்டவர்களை அதீத உற்சாகத்தில் வைத்திருக்க உதவுகிறதாம்.
இந்த வேதிப் பொருளானது கிட்டத்தட்ட மிதப்பிலேயே காதலர்களை வைத்திருக்க உதவுகிறதாம். அதாவது ஒருவிதமான கிறக்க நிலைக்கு அந்தக் காதலர்கள் போய் விடுகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில்தான் காதல் ஞானியாகி, கையில் கிடைத்ததை எடுத்து மனதில் தோன்றியதை எல்லாம் எழுதுகிறார்களாம், பேசுகிறார்களாம்.
ஓஹோ... அதுதான் காதல் வந்தவனைப் பார்த்து காதலை வெறுப்போர், அடேய் 'மூளை கெட்டவனே' என்று கூறுகிறார்களோ...!
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications