அமீரகத்தில் இந்திய குடியரசு தினவிழா கொண்டாட்டம்
அபுதாபியில் இந்தியப் பள்ளியில் இந்திய தூதரகத்தின் சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. மூவர்ணக் கொடியினை இந்திய தூதர் எம்.கே. லோகேஷ் ஏற்றி வைத்தார். இந்திய தூதரகத்திற்கு வெளியே குடியரசு தினவிழா கொண்டாடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
மேலும் பள்ளி மாணவர்களின் தேசபக்தியினை ஊக்கப்படுத்தும் விதமாக அபுதாபி இந்தியப் பள்ளியில் இந்திய தூதரகத்தின் கொடியேற்று விழா கொண்டாடப்படுவதாக லோகேஷ் தெரிவித்தார்.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவரின் குடியரசு தின உரையிலிருந்து முக்கியப் பகுதிகளை வாசித்தார். தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் சேர்மன் பி.ஆர். ஷெட்டி, முதல்வர் விஜயசந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதே போன்று துபாய் இந்தியப் பள்ளியில் இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து குடியரசுத் தலைவரின் குடியரசு தின உரையிலிருந்து முக்கியப் பகுதிகளை வாசித்தார்.
மேலும் அவர் இந்திய வளர்ச்சியில் அமீரக வாழ் இந்தியர்களின் பங்களிப்பு குறித்து பெரிமிதம் கொண்டார். வெளிநாடு வாழ் இந்தியராக தென் ஆப்பிரிக்காவில் இருந்த மஹாத்மா காந்தி இந்திய விடுதலைக்கு பாடுப்பட்டதை நினைவு கூர்ந்தார். மேலும் அமீரக இந்திய வர்த்தக உறவு குறித்தும் விவரித்தார். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் இந்திய வர்த்தகப் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்













Click it and Unblock the Notifications