உலக அமைதிக்காக நாளை துபாயில் மாபெரும் பேரணி
துபாய்: துபாயில் உலக அமைதிக்கான முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் விருது என்ற அமைப்பின் சார்பில் 06.04.2012 அன்று மாலை துபாய் உலக வர்த்தக மையத்தில் இருந்து உலக அமைதிக்கான மாபெரும் பேரணி நடைபெற இருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தனர்.
உலக அமைதியை ஏற்படுத்துவதற்கு ஒரு முயற்சியாக இந்த பேரணி நடைபெற இருக்கிறது. இப்பேரணியில் அமீரகத்தில் வாழ்ந்து வரும் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் இன, மத, மொழி, நாடு என்ற பேதமின்றி கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த அமைதிப் பேரணியையொட்டி வண்ண மயமான் பலூன்கள் வான்வெளியில் பறக்க விடப்படும். பாராசூட், மோட்டார் பைக்குகள், அலங்கார வாகனங்கள் எனப் பல்வேறு விதமான வாகனங்கள் இப்பேரணியில் அணிவகுக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் மனிதாபிமான சேவையினை மையமாகக் கொண்டு துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நோயாளிகளைச் சந்தித்து அன்பளிப்புகளும் வழங்கப்பட் இருக்கிறது.
செய்தியாளர்கள் கூட்டத்தில் சம்சுதீன் பின் முஹைதீன், ஏ.பி. அப்துல் சமது, டாக்டர் எம்.கே. இப்ராஹிம், கலீஃபா அல் சபர், ஜக்கரியா, அஹமது அல் பதாவி, அஹமது ஹமத், பைஜு சையது, நஜீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்தும் மேலும் தகவல் அறிய விரும்புவோர் 04 6087 602 / 050 798 10 76 / 04 333 47 67 எனும் தொலைபேசி எண்களிலோ அல்லது [email protected] எனும் மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications