For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பன்னாட்டு மதுபான நிறுவனங்களை ஆளும் பெண்கள்!

By Siva
Google Oneindia Tamil News

Aparna Batra and Abanti Sankaranarayanan
ஆண்கள் ஆதிக்கமுள்ள பன்னாட்டு மதுபான நிறுவனங்களில் உயர் பதவிகளுக்கு பெண்கள் நியமிக்கப்படுகி்ன்றனர்.

இந்தியாவில் உள்ள பன்னாட்டு மதுபான நிறுவனங்களில் பெண் உயர் அதிகாரிகள் இருக்கின்றார்கள். இதுவே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனங்கள் பெண்களை வேலையமைர்த்த நினைத்துப் பார்த்தது கூட இல்லை. ஆனால் தற்போது ஆணாதிக்கம் உள்ள மதுபான நிறுவனங்களில் பெண்கள் உயர் பதவியில் இருக்கின்றனர்.

உலகின் மிகப்பெரிய மதுபான நிறுவனமான டியாஜியோவின் இந்திய கிளையில் பணிபுரியும் 30 மேனேஜர்களில் 12 பேர் பெண்கள். அந்நிறுவனத்தில் துணை எம்.டி. உள்பட 4 பெண் ரைடக்டர்கள் உள்ளனர். டாடா குளோபல் பெவரேஜஸ் எக்ஸ்கியூட்டிவாக இருந்த அபந்தி சங்கரநாராயணன் தான் தற்போது டியாஜியோவின் துணை எம்.டி.

ஸ்காட்ச் தயாரிக்கும் வில்லியம் கிரான்ட் அன்ட் சன்ஸ்-ன் இந்திய பிரிவுக்கு தலைமை தாங்கி வழி நடத்திச் செல்வது அபர்ணா பட்ரா என்ற பெண்மணி தான். இந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 25 சதவீதம் பேர் பெண்கள். இது தவிர பெர்னாட் ரிகார்ட் நிறுவனத்தின் பிராண்டிங் மற்றும் மார்கெட்டிங் பிரிவில் பணிபுரியும் 3ல் ஒரு பங்கு பேர் பெண்கள்.

உலகப் புகழ்பெற்ற டியாஜியோ, பெர்னாட் ரிகார்ட், பகார்டி மற்றும் பீம் போன்ற பன்னாட்டு மதுபான நிறுவனங்கள் தங்களது வியாபாரத்தை விரிவுபடுத்துவதோடு அந்த பொறுப்பை பெண் நிர்வாகிகளிடம் ஒப்படைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Women executives are heading the India operarions of liqour MNCs like Diageo, Scotch maker William Grant & Sons, Pernod Ricard and Bacardi. Women are showing their mettle in the male dominated sector.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X