For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விந்தணுக்களுக்கு குளிர் காலத்தில் தான் வீரியமும் ஜாஸ்தி! வேகமும் ஜாஸ்தி!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஆண்களின் உடலில் குளிர் காலத்தில் அதிக அளவு விந்தணு இருக்கும் என்றும் அது விரைவாக செயல்படும் நிலையில் இருக்கும் என்றும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் பென்-கரியன் பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை வீரியம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வுக்காக கடந்த 2006ம் ஆண்டு ஜனவரியில் இருந்து 2009ம் ஆண்டு வரை சுமார் 6,455 ஆண்களிடம் இருந்து விந்தணு திரவம் சேகரிக்கப்பட்டு அவற்றின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அந்த பரிசோதனையில் சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன. மேற்கொண்டு படியுங்களேன்.

16 மில்லியன் விந்தணுக்கள்

16 மில்லியன் விந்தணுக்கள்

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் 1 மில்லி மீட்டர் திரவத்தில் 16 மில்லியன் விந்தணுக்கள் காணப்படுவது இயல்பான விந்தணு உற்பத்தி என தெரிவித்துள்ளது.

மாதிரி ஆண்களின் விந்தணு

மாதிரி ஆண்களின் விந்தணு

இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற ஆய்வில் பங்கேற்ற 6,455 பேரில் 4,960 பேருக்கு இயல்பான விந்தணு உற்பத்தி காணப்பட்டது. மீதமுள்ள 1,495 பேருக்கு குறைவான விந்தணு எண்ணிக்கை போன்ற வழக்கத்திற்கு மாறான குறைபாட்டுடன் உற்பத்தி காணப்பட்டது.

குளிர் காலத்தில் 70 மில்லியன்

குளிர் காலத்தில் 70 மில்லியன்

இந்த ஆய்வில், குளிர் காலத்தில் ஆணின் உடலில் உருவாகும் விந்தணுக்கள் மிக ஆரோக்கியமானதாக இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், அந்த கால கட்டத்தில் ஆண்களின் உடலில் 70 மில்லியன் விந்தணுக்கள் உற்பத்தி ஆனது.

குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம்

குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம்

அவற்றில் 5 சதவீத அணுக்கள் வேகமான செயல்பாடும், வீரியம் மிக்கவையாகவும் இருந்தன. இதனால் தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் காணப்பட்டது.

வசந்தகாலம் சரிப்படாது

வசந்தகாலம் சரிப்படாது

இதுவே வசந்த காலத்தில் விந்தணுவின் எண்ணிக்கை சற்று குறையும். அதோடு அதன் வேகத்திலும் சற்று தொய்வு ஏற்படும் என ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.

இதுவே, வசந்த காலத்தில் ஒரு மில்லி மீட்டர் திரவத்தில் 68 மில்லியன் விந்தணுக்கள் இருப்பதும் அதில் 3 சதவீதம் அளவு விந்தணுக்களே வேகமான செயல்பாட்டு திறனுடன் இருந்ததும் கண்டறியப்பட்டது.

ஆரோக்கியமான ஆண்கள்

ஆரோக்கியமான ஆண்கள்

எனவே, ஆய்வின் முடிவில் குளிர் காலத்தில் ஆண்களிடம் ஆரோக்கியமான மற்றும் அதிக எண்ணிக்கையிலான ஒழுங்கான வடிவம் கொண்ட விந்தணுக்கள் காணப்பட்டன.

சீரற்றவர்களுக்கு பொருந்தாது

சீரற்றவர்களுக்கு பொருந்தாது

வசந்த காலத்தில் அத்தகைய விந்தணுக்களின் எண்ணிக்கை 7 சதவீதம் அளவிற்கு இருந்ததும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனினும், சீரற்ற விந்தணு உற்பத்தி கொண்ட மனிதர்களுக்கு இந்த ஆய்வு முடிவு பொருந்துவதில்லை என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

English summary
Couples trying to conceive a baby, should try during winter and spring, as human sperm seem to be healthier — with faster swimming speeds and fewer abnormalities — during those times, a new study has found.Autumn is the time of year most associated with bumper crops of new babies, and according to an Israeli study there may be a scientific reason for it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X