ரியாத்தில் பேச்சாலும், பாட்டாலும், தாளத்தாலும் வசீகரித்த டி. ராஜேந்தர்

விழாவில் நகைச்சுவையாகவும் அங்கதமாகவும் உரையாற்றிய இனியவன் தற்காலத் தமிழ் திரைப் பாடல்களைத் தனக்கே உரிய பாணியில் கேலி செய்து பேசினார். 'குழந்தை பாடும் தாலாட்டு' என்ற டி. ராஜேந்தரின் பாடலைக் கேட்டு கண்ணதாசனே வியந்து பாராட்டினார் என்றும் இனியவன் கூறினார்.
பின்னர் பேசிய டி. ராஜேந்தர் தனது பேச்சாலும், பாட்டாலும், தாளத்தாலும் பார்வையாளர்களை வசீகரித்தார். தனது தொடக்கக் கால திரைப் பாடல்களைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், இலக்கிய நயத்துடன் இத்தனை சிறப்பாக எழுதியிருந்தாலும், டண் டணக்கா என்று பாட்டு போட்டால் தான் அது அதிக மக்களை கவர்கிறது. அதிகம் 'பார்வை' கிடைக்கிறது. 'டண் டணக்கா' என்று தன்னை விமர்சிப்பவர்களும் அதை ரசிக்கவே செய்கிறார்கள் என்று குறிப்பிட்டார். விரைவில் திரையுலகில் 'ஒருதலை காதல்' படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க இருப்பதாகவும் அதன் பொருட்டே இறையருளை நாடி சவூதி அரேபியா வந்ததாகவும் தெரிவித்த அவர் தனது முயற்சியில் வெல்வதற்காக பிரார்த்தனை செய்யும்படி ரசிகர்களைக் கேட்டுக் கொண்டார்.
அதன் பிறகு ரியாத் வாழ் தமிழர்கள் கலந்து கொண்ட பேச்சரங்கம், அயல்நாட்டுப் பணியினால் அதிக ஆதாயம் அடைவது வந்த நாடா? சொந்தநாடா? வந்தவரா? உறவினரா? என்ற தலைப்பில் நடைபெற்றது.
ரியாத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ஹைதர் அலி, பஃக்ருத்தீன் இப்னுஹம்துன், கே.வி.ராஜா, ஜோஸ் அலெக்சாண்டர், மாலிக் இப்ராஹிம், இம்தியாஸ், லக்கி ஷாஜஹான், ஷரீஃப், ஜவஹர் சவரிமுத்து, ஷஃபி, அபுல்ஹசன், சஜ்ஜாவுதீன், ஷாகுல் ஹமீது, முஹையத்தீன் கஸ்ஸாலி, சிக்கந்தர், மதி, ராம், ராஜேஷ் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இந்த விழாவில் ஆயிரத்திற்கும் அதிகமான ரியாத் வாழ் தமிழர்கள் தங்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications