துபாயில் வைரமுத்துவின் 'பொன்மாலைப் பொழுது'

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் முத்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்ட பொன்மாலைப் பொழுது நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

துபாய் முத்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் சின்னக் கலைவாணர் விவேக் கலந்து கொண்ட என்றென்றும் முத்துக்கள் என்ற தலைப்பில் பொன்மாலைப் பொழுது நிகழ்ச்சி கடந்த 28ம் தேதி மாலை 7 மணியளவில் முத்தமிழ்ச் சங்கத் தலைவர் மோகன் தலைமையில் அல்நாசர் லெஷர்லேண்ட் அரங்கில் நடைபெற்றது.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தனது வசிகரமான குரலால் அரங்கில் அமர்ந்திருந்த அனைவரது கவனத்தையும் ஈர்த்து பசுமையான நினைவுகளை இதயத்தில் பதித்து வைத்தார். மேலும் முத்தமிழ்ச் சங்கத்தின் 23ம் ஆண்டு மலரையும் வெளியிட்டு கௌரவித்தார்.

சின்னக்கலைவாணர் விவேக் தனக்கே உரித்தான நகைச்சுவை பேச்சால் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்க வைத்தார் .

மேலும் யு.கே. முரளி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ், சூப்பர் சிங்கர் புகழ் அல்கா அஜித், பாடகி ஷப்னம், பாடகர் வெங்கட் ஆகியோர் பாடல்கள் பாடி பார்வையாளர்களை பரவசமாக்கினார்கள்.

இறுதியாக பாலிவுட் புகழ் ஃபீட்ஸ் அன்ட் பீட்ஸ் நடனக் குழுவினரின் நடனம் பார்வையாளர்களை சொக்க வைத்தது.

படம் 1
படம் 2
படம் 3
படம் 4
படம் 5
படம் 6
படம் 7
படம் 8

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+