For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீபாவளியை தடபுடலாக கொண்டாடும் அமெரிக்க தமிழ்ச் சங்கங்கள்

Google Oneindia Tamil News

சார்லட், வடக்கு கரோலினா: அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் தீபாவளி கொண்டாட்டங்களில் இந்தியர்கள் குறிப்பாக தமிழ்ச் சங்கங்கள் தடபுடலாக ஈடுபட்டுள்ளன.

வார இறுதி நாளில் பல்வேறு கொண்டாட்ட நிகழ்வுகளை இந்த தமிழ்ச் சங்கங்கள் முன்னெடுத்துள்ளன. ஒவ்வொரு மாகாணத்திலும் இருக்கும் தமிழ் சங்கங்கள் தீபாவளியை சிறப்பாக மக்கள் கொண்டாடும் வகையில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளன.

இசை நிகழ்ச்சி, டான்ஸ் ஷோ, தீபாவளி பேஷன் ஷோ எனக் கொண்டாட்டங்கள் அங்கு களை கட்ட காத்திருக்கின்றன. இந்த சிறப்பு நிகழ்ச்சிகள் தீபாவளி அன்று என்று இல்லாமல் மக்களுக்கு வசதிப்படும் வகையில் தீபாவளி கொண்டாட்டத்தின் வார இறுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நியூஜெர்சியில் கொண்டாட்டம்

நியூஜெர்சியில் கொண்டாட்டம்

நியூஜெர்சி தமிழ்ச் சங்கம் தனது தீபாவளிக் கொண்டாட்டத்தை வருகிற 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வடக்கு பிரவுன்விக் நகரில் ஏற்பாடு செய்துள்ளது.

நியூயார்க்கில் பாலிவுட் டான்ஸ்

நியூயார்க்கில் பாலிவுட் டான்ஸ்

நியூயார்க்கின் ஹிக்ஸ்வில்லியில் பாலிவுட் டான்ஸ் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். பல்வேறு விதமான கச்சேரிக்கு இது உத்தரவாதம் தருகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் முற்றிலும் இந்திய பாரம்பரிய உடைகளில் வர வேண்டுமாம்.

விளக்குகளின் திருவிழா

விளக்குகளின் திருவிழா

நியூஜெர்சியில் இன்னொரு நிகழ்ச்சியாக தீபாவளி தமாகா 2017 என்ற பெயரில் விளக்குகளின் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ராயல் ஆல்பர்ட் பாலஸில் இது நடைபெறவுள்ளது.

நியூயார்க்கில் பேஷன் ஷோ

நியூயார்க்கில் பேஷன் ஷோ

நியூயார்க்கின் 224 மேற்கு 49வது தெருவில் உள்ள லி கிராண்டேயில் அக்டோபர் 20ம் தேதி இரவு 9 மணிக்கு இந்திய பேஷன் ஷோவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடிய விடிய பாலிவுட் பார்ட்டியும் உண்டு.

- Inkpena சஹாயா

English summary
English summary Indians in the US are celebrating the Deepavali in a grand manner as usual. Various Tamil associations are celebrating the festival with various programmes this weekend. Writer Inkpena Sahaya gives us the details.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X