சிகாகோவில் நையாண்டி மேளம், கரகாட்டத்துடன் இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நேப்பர்வில்(யு.எஸ்): சிகாகோ மா நகரின் புறநகர்ப் பகுதியான நேப்பர்வில்லில் இந்திய சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அறுபதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பங்கேற்ற இந்த விழாவில் அமெரிக்கத் தமிழர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், சிலம்பம், கும்மி என்று அசத்தி பார்வையாளர்களை கட்டிப்போட்டு விட்டனர்.

அமெரிக்காவின் பெரும் நகரங்கள் முதல் சிறு நகரங்கள் வரை இந்தியர்கள் ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். டெல்லி, சென்னையைப் போல் அலங்கார ஊர்திகளுடன், நகரின் மையப்பகுதியில் ஊர்வலமாகச் செல்கின்றனர்.

 சிகாகோவில் தமிழர்கள் ஊர்தி

சிகாகோவில் தமிழர்கள் ஊர்தி

பொதுவாக இத்தகைய ஏற்பாடுகளை இந்தியா அசோசியேஷன் அல்லது தன்னார்வ அமைப்புகள் முன்னின்று நடத்தி வருகின்றனர். பெரும்பாலன ஊர்களில் தமிழ் அமைப்புகளுக்கு அழைப்பு இருப்பதில்லை அல்லது இருந்தாலும் கலந்து கொள்வதும் அரிதாகத்தான் இருக்கிறது.

நையாண்டி மேளம் - பறையிசை

நையாண்டி மேளம் - பறையிசை

Naperville Indian Community Outreach அமைப்பின் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிகாகோ தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ் தொழில் அமைப்பு சார்பிலும் ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டனர் . இரண்டு ஊர்திகளுடன் தமிழர்கள் நையாண்டி மேளம், பறையிசை, கரகாட்டம், சிலம்பம், கும்மி என ஊர்வலமாக சென்றனர்.

 நேரடி ஒளிபரப்பு

நேரடி ஒளிபரப்பு

பார்வையாளர்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் தமிழர்களின் இசையும் நடனமும் கொள்ளை கொண்டு விட்டது. உள்ளூர் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பாக வந்த இந்த கொண்டாட்டத்தை, ஊர்வலத்திற்கு வராத அமெரிக்கர்களும் கண்டு களித்தனர்.

சிலம்பம் - கரகம் - கும்மி

சிலம்பம் - கரகம் - கும்மி

செயிண்ட் லூயிஸ் அமெரிக்கத் தமிழ் நிகழ்கலைக் கழகத்தின் சிலம்ப வீரர்கள், பறையிசை அணியினர், கரகக் கலைஞர்கள், கும்மி குழுவினர், நையாண்டி மேளக் குழுவினர் விழாவில் சிறப்பு சேர்த்தனர். சிகாகோ தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ் தொழில் அமைப்பின் குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 துணை கவர்னர் பங்கேற்பு

துணை கவர்னர் பங்கேற்பு

இருபதாயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் விழாவில் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக இலனாய் மாநிலத்தின் துணை கவர்னர் எவ்லின் (Evelyn Sanguinetti) பங்கேற்றார். உடன் இந்திய கன்சுலேட் ஜெனரல் டாக்டர்,ஆசூப் சையது, ஜனநாயகக் கட்சியின் அமெரிக்க காங்கிரஸ் சபை வேட்பாளர் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர். சிகாகோ வட்டார இந்திய சமுதாய மக்கள் மத்தியில், தமிழர்களின் வலுவான இருப்பைக் காட்டுவதாக இந்த விழா அமைந்திருந்தது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Chicago based Naperville Indian Community Outreach has celebrated Independence day in Tamils style.
Please Wait while comments are loading...