For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குவைத்தில் ஈத் பெருநாளை முன்னிட்டு கேஐஎஃப்எஃப் நடத்திய விளையாட்டு​ப் போட்டிகள்

By Siva
Google Oneindia Tamil News

குவைத்: குவைத் இந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபோரம் நடத்திய விளையாட்டு தின விழா கடந்த 18ம் தேதி குவைத்தில் நடந்தது.

குவைத்தில் பல்வேறு சமூக நல பணிகளை செய்து வரும் குவைத் இந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபோரம் (KIFF) ஈத் பெருநாளை முன்னிட்டு விளையாட்டு தின விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

கடந்த 18-10-2013 அன்று ரிக்கா மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

5 அணிகள்

5 அணிகள்

ப்ளூ, ரெட், கிரீன், எல்லோ, ஆரஞ்சு அணிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தின. கால் பந்தாட்டம், கபடி, கைப் பந்தாட்டம், ஓட்டப் பந்தயம், கயிறு இழுக்கும் போட்டி உள்பட பல போட்டிகள் நடைபெற்றது. கால்பந்து, கைப்பந்து, கபடி போட்டிகளில் வென்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.

ஆரஞ்சு அணி

ஆரஞ்சு அணி

இறுதியாக ஆரஞ்சு அணி 18 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், ரெட் அணி 17 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தையும் பிடித்தன. ப்ளூ மற்றும் கிரீன் அணியினர் 6 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டனர். இது மட்டுமின்றி பார்வையாளர்களுக்கான விளையாட்டுப் போட்டி, சிறுவர்கள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

உற்சாக பங்கேற்பு

உற்சாக பங்கேற்பு

மதியம் 2 மணிக்கு ஆரம்பித்த போட்டிகள் இரவு 8.30 மணி வரை தொடர்ந்தன. இறுதியாக பரிசளிப்பு விழா நடைப்பெற்றது. குவைத் இந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபோரம் இந்த நிகழ்ச்சிக்கு விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. அதன் தன்னார்வச் செயல்வீரர்கள் சுழன்று சுழன்று சேவைகள் புரிந்தனர்.

மகிழ்ச்சி கொண்டாட்டம்

மகிழ்ச்சி கொண்டாட்டம்

குவைத்தின் பல பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விடுமுறை தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய திருப்தி அவர்களின் முகங்களில் தெரிந்தது.

English summary
Kuwait India Fraternity Forum(KIFF) celebrated sports day in Kuwait on october 18. Indians residing in Kuwait participated in the competitions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X