For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்களை விட ஆண்கள் தான் நலமாக, சந்தோஷமாக இருக்கிறார்களாமே!!!

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: புதிய ஆய்வின்படி பெண்களை விட ஆண்கள் தான் நலமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

ஆண்கள், பெண்களில் யார் நலமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளனர் என்று இங்கிலாந்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. தேசிய அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 2 ஆயிரம் ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வு முடிவு என்னவென்று பார்ப்போம்.

உடல் எடை

உடல் எடை

உடை எடை, அமைப்பு, தோற்றம் ஆகியவற்றுக்கு ஆண்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்காததால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது தெரிய வந்துள்ளது.

பெண்கள்

பெண்கள்

பெண்கள் உணவுக் கட்டுப்பாடு, உடை எடை, தான் அழகாக இருக்கிறோமா, நம்மை பார்த்து பிறர் என்ன நினைக்கிறார்கள் என்று அதிகம் வருத்தப்படுகிறார்களாம்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்களுக்கு மனஅழுத்தம் குறைவாம். ஆய்வில் கலந்து கொண்ட ஆண்களில் 60 சதவீதம் பேர் மாதத்தில் ஒரு முறை மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் பெண்களுக்கோ வாரத்திற்கு ஒரு முறை ஏன் கூடுதல் முறை கூட மனஅழுத்தம் ஏற்படுகிறதாம்.

கவலை

கவலை

ஆய்வில் கலந்து கொண்ட ஆண்களில் 70 சதவீதம் பேர் எப்பொழுதாவது தான் கவலையாக அல்லது மூடு மாறிக் கொண்டே இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதே சமயம் பெண்களில் பாதிப் போர் மாதத்தில் ஒரு முறையாவது கவலையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தலைவலி

தலைவலி

ஆண்களில் சிலர் மட்டுமே தங்களுக்கு தலைவலி, அஜீரணம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் ஆய்வில் கலந்து கொண்ட பெண்களில் 64 சதவீதம் பேர் இந்த பிரச்சனைகள் தங்களுக்கு குறைந்தது மாததத்தில் ஒரு முறையாவது ஏற்படுகிறது என்று கூறியுள்ளனர்.

English summary
Men are healthier and happier about their appearance than women in general, according to a new survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X