துபாய்: மனதைக் கவர்ந்த தமிழ்க் குழந்தைகளின் நடன நிகழ்ச்சி
துபாய்: துபாயில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் நடன நிகழ்ச்சியை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் கண்டு ரசித்து பாராட்டினர்.
துபாயில் வருடந்தோறும் குளோபல் வில்லேஜ் உலக சுற்றுலா பார்வையாளர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியன் பெவிலியன் அரங்கமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் குழந்தைகள்
கடந்த வெள்ளிக்கிழமை மாலை இந்தியன் பெவிலியனில் பிரசித்தம் நடனக்குழுவில் இடம்பெற்றுள்ள தமிழ்க் குழந்தைகளின் நடன நிகழ்ச்சி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

பஞ்சாபிய நடனம்
மேலும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் சிறப்பு நடன நிகழ்ச்சி மனதைக் கொள்ளை கொள்வதாக அமைந்திருந்தது. பஞ்சாபிய நடன நிகழ்ச்சியும் நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டியது.

வயலட் தேவதைகள்
வண்ண வண்ண உடையணிந்து வயலட் தேவதைகளாய் பெண் குழந்தைகள் நடனமாடினர்.

குவிந்த பார்வையாளர்கள்
வருடத்தின் முதல் வெள்ளிக்கிழமை மற்றும் துபாய் ஷாப்பிங்க் ஃபெஸ்டிவல் துவங்கிய காரணத்தால் பார்வையாளர்களின் கூட்டம் அளவுக்கதிகமாக இந்தியன் பெவிலியனில் காணப்பட்டது.

பார்வையாளர்கள் பாராட்டு
குளிரையும் பொருட்படுத்தாது குடும்பத்தினருடன் வருகை தந்து நிகழ்வினை ரசித்தனர். அனைவருக்கும் இருக்கை வசதி செய்ய இயலாத காரணத்தால் பலர் நின்று கொண்டே நிகழ்வினை ரசித்தனர்.

ரசிகர்களுக்கு நன்றி
வாழ்த்திய அனைவருக்கும் பிரசித்தம் குழுவின் தலைமை நிர்வாகி கவிதா பிரசன்னா நன்றி தெரிவித்துக் கொண்டதுடன் வாய்ப்பினை வழங்கிய இந்தியன் பெவிலியன் நிர்வாகத்தினருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications