நினைவுகளின் பூனை
நினைவுகளின் பூனை,
ஓரத்தில் அமர்ந்து கொண்டிருக்கும்,
ஒன்றுமே அறியாததான பாவனைகளுடன்.
நுனிப்பாதங்களில் நடந்து,
கவனிக்காத தருணங்களில்
தரிசனம் தந்து நம்மை
நிதானமிழக்கச் செய்யும்.
நகங்களைக் காட்டிலும்
அதன் நீல நிற விழிகளின்
கூர்மை
நம்மைக் காயப்படுத்தும்.
சில மழைநேரப் பொழுதுகளில்
மடியேறிப் படுத்துறங்கும்
சலனமற்ற குளத்தில் யாரேனும்
கல்லெறிந்து கலைத்தால்,
பூனைக்கு மட்டுமல்ல
நமக்கும் சினம்பிறக்கும்.
கோபம் வருகையில் விரட்டிப் பிடித்து
உயரத்தூக்கி
பலங்கொண்ட மட்டும் தூக்கியெறிவோம்,
அதுவோ,
சிராய்ப்புகளுமின்றி
உயிர்பிழைத்தெழுந்து
ஏளனமாய்ச் சிரித்து நகரும்.
கண்ணில் படாமல் மறைந்து
மரமேறி ஒளிந்து கொண்டாலும்
பின் தொடர்ந்து தேடி வந்து
மரமேறி நின்று
மீசை காட்டி மிரட்டும்.
நினைவுகளின் நாய்களில்
சில நமக்கு அடிமைகள்,
சில நமக்குத் தோழர்கள்,
சில நமக்குக் காவலர்கள்.
நினைவுகளின் பூனைகள்
எல்லாமே நமக்கு எஜமானர்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications