கட்டளை- பத்மப்ரியா
வெறுமையான நண்பகலில்
வழிப் போக்கியைப் போல்
உனது தெருவில் நான்
உன் வீட்டை கடக்கையில்
எனக்கான மெளன அஞ்சலியாய்
கூடத்து ஊஞ்சலும் தூண்களும்
காற்றில் திரும்புவதாய்
முன் சக்கரம் திருப்பி
என் முகம் பார்க்கும்
உன் மிதிவண்டி
கடை முற்றத்து மல்லி
கிளை அசைவில்
வா என்றழைக்கும்
தற்கொலை முயற்சி போல்
தலைகீழாய் தண்ணீருக்குள்
தளர்ந்து விழும் உன் கிணற்று வாளி
கொல்லை துளசியும் வேம்பும்
காற்றே ஊடகமாய் என்
கரம் பற்றும்
உங்கள் கருவிழி லஷ்மி
என் தோளில் முகம் இழைக்க
கழுத்து மணி அசைக்கும்
உள்ளே நுழைந்து என்
முந்தானைக் காற்றால்
அவற்றின் முகம் துடைக்க
ஆசைதான்- - ஆனால்
நீதான்
"என்னை மறந்துவிடு" என்றாயே,
- பத்மப்ரியா([email protected])
இவரது முந்தைய படைப்பு:
1. என் விருந்தாளி
2. கடிதம்
3. முரண்பாடுகள்
4. கணக்கீடுகள்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications