ஏவாள்- பத்மப்ரியா
அகிலாண்டேஸ்வரி ஆதிபராசக்தி - என
தெய்வமாய் பெண் வேண்டும்
தெய்வத்தின் மறு உருவென
ஆருயிர் தந்து அமுதூட்ட
அம்மா வேண்டும்
வாரிசுக்காக
மனைவியெனும் தேவதையும் தேவை
மைத்துனிகள் இரண்டோ மூன்றோ
இருந்தால் இதயத்திற்கு விருப்பம்தான்
கண்ணுக்கு குளிர்ச்சியாக காதலியும்
கடைத்தெருவில் கலர் பார்க்க
கன்னியரும் கட்டாயம் வேண்டும்
அலுவலகத்தில் ஆரணங்குகள் இருந்தால்
அவ்வப்போது பார்த்துக் கொள்ளலாம்
அநுக்கியாக நல்லதொரு இளம்பெண்
அமைந்தால் நாள்தோறும் பழகலாம்
ஆசிரியை, பெண் மருத்துவர்,
பெண் தாதியர்
மனதிற்கு இதம்
திறந்தவாய் மூடாமல் பார்க்க
திரையில் கதாநாயகியர்
மூவராவது வேண்டும்
ஷேவிங் க்ரீம் முதல்
சேவிங்ஸ் பேங்க் வர
விளம்பரத்தில் பெண் வேண்டும்
மகனுக்கு அடக்கமாய்
மருமகளாய் நல்ல பெண்
அமைய வேண்டும்
ஆனால் உனக்கு
மகளாக மட்டும் பெண்
வேண்டவே வேண்டாம்
கருவிலேயே களைந்தெறிவாய்
- பத்மப்ரியா([email protected])
இவரது முந்தைய படைப்பு:
1. என் விருந்தாளி
2. கடிதம்
3. முரண்பாடுகள்
4. கணக்கீடுகள்
5. கட்டளை
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications