நரகாசுரனின் மரணம்ரிஷி சேது
சுற்றி சுற்றி வரும்
என் சந்தோஷக் கனவுகளை கொண்டு
"சங்கு சக்கரம்"
அப்பா பதினாறு மத்தாப்பு
வாங்கி வந்து மூன்று பேருக்கும்
பிரித்துக்கொள்ளச் சொல்வார்
சரியாய் பிரித்து வரும் மிச்ச ஒன்றை
தம்பிக்கு அரைமனதாய் கொடுப்போம்
நானும் அண்ணாவும்
அப்பா-
வெடிக்கும் எதையும்
வாங்கி தரமாட்டார்
ஒரே ஒரு முறை ஓலை வெடி
வாங்கி வந்து நூறு
எச்சரிக்கை செய்தார்- அதில்
இருபதுக்கும் மேல் வெடிக்கவேயில்லை
அப்போதே ஆனந்து வீட்டில்
ஆயிரம்வாலா வெடிப்பார்கள்
அப்போதெனக்கு துணிமணிகள் மீது
அத்தனை ஆசையில்லை, ஆனாலும்
பண்டிகைக்கு பத்து நாள் முன்பு
மணியன் கடையில் கொடுத்து
பட்டன் தெரியாமல் தைக்க சொல்வேன்
கோ-ஆப்டெக்ஸில் எல்லோருக்கும் எடுத்து
அப்பாவும் அம்மாவும் மிஞ்சும்
பணத்தில் எதையோ எடுத்துக் கொள்வர்
அம்மா ஆறுதலடைந்திருக்கலாம்
மகன்கள் வேலைக்குப்போய்
பட்டுப்புடவை எடுப்பார்களென்று
எண்ணை தேய்த்து குளித்து
பலகாரம் தின்று
நண்பர்களுடன் சினிமா போய்
அடுத்த நாள் பள்ளி செல்லும் போது
அம்மாவை கவனிப்பேன்
ஓராயிரம் கனவுகள் மின்னும்
அக்கண்களில்....
பண்டிகைக்காக செலவழித்த
தோடோ, வளையலோ இழந்த
ஏக்கம் மறைத்து...
அதன் பிறகும் நிறைய
தீபாவளி வந்து போயிற்று
இன்றைக்கும் எனக்கு ஏக்கமுண்டு
அப்பாவிற்கும் அம்மாவிற்கும்
துணிகளெடுத்து- நிறைய
வெடி வெடித்துக் கொண்டாட
நரகாசுரனின் மரணம்
எத்தனை சந்தோஷமானது
என்றெண்ணிய நாளில்
வெடித்ததென் குரூரம்
சீன வெடியாய்...
அம்மாவின் பட்டுப்புடவை அதில்
கருகிப்போயிற்று
நான் இப்போதெல்லாம்
தீபாவளி கொண்டாடுவதில்லை.....
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications