அந்த 42 பேர்- சுப.வீரபாண்டியன்
150 ஆண்டுகளுக்கு முன்
மொரீசியஸ் நாட்டிற்கு
ஆப்பிக்கக் காட்டிற்கு
பிஜித் தீவுகளின்
கரும்புத் தோட்டத்திற்கு
இலங்கையின் மலையகப் பகுதிகளுக்குக்
கூலிகளாய்க் குடிபெயர்ந்தனர்
நம் மூதாதையர்.
அவர்கள் தம் வாழ்வை,
மாதம் ஒரு மரக்கால் நெல்லுக்கும்
முற்றிய தேங்காய்க்கும்
விற்றுக்கொண்டனர்.
கஞ்சி குடிப்பதற்கின்றி, அதன்
காரணம் இதுவெனும் தெளிவுமின்றி
வெள்ளையர் காட்டிய திசைகளில்
நடந்தன அவர்களின் கால்கள்
மடிந்தது அவர் தம் வாழ்வு.
இப்போது எல்லாம்
உள்நாட்டிலேயே!
கும்பகோணம் குழந்தைகளுக்கு நெருப்பு!
கரையோர உறவுகளுக்குக் கடல்!
சென்னை மக்களுக்கு
நெரிசலே போதுமென்றாகிவிட்டது.!
எம் மக்களே,
உம் உயிரின் விலை
வெறும்
இரண்டாயிரம் ரூபாய் தானா?
வெள்ளத்தில் கூடத்
தப்பிப் பிழைத்த உங்களை
வெள்ள நிவாரணம்
அடித்துச் சென்றுவிட்டதே!
கேள்வி கேட்பதற்கும்
இலஞ்சம் வாங்கும்
அரசியல்வாதிகள் ஒருபுறம்;
கேள்வி கேட்க யாருமின்றி
அனாதைப் பிணங்களாய்
மக்கள் மறுபுறம்!
துருவங்களில் வாழ்கிறது நம்தேசம்!
மனம் கசிய
கண்ணீர் மல்க
இரங்கி நிற்கின்றோம்-
இறந்துபோன
உங்களுக்காக மட்டுமில்லை
அதே
இரண்டாயிரம் ரூபாய்க்காக
ரேசன் கடை வாசல்களில்
இன்றும் காத்துக் கிடக்கும்
ஏழைத் தமிழர்களுக்காகவும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications