For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதுவும் சுகம்!

By Staff
Google Oneindia Tamil News

தோற்பது
நிஜம் பேசுவதை விட சுகம்..
உன்னை
ஜெயிப்பதைக் காட்டிலும்!!
எதிர்ப் பேச முடியாமல்
வாதிடத் தெரியாமல்
ஊமையாய் உள்ளுக்குள் அழுதாலும்
எதிர்பார்த்த ஏக்கங்கள்
எதையெதையோ எடுத்து வைக்க
மாலையில் மனசுபூட்டி நடக்கையிலும்
வார்த்தைக்கு மவுனம் பூட்டி,
உரசிப்போகும் ஊதக்காற்றில்
உதட்டுவழி உயிர் உருக,
உன் அன்பு விசாரிப்பை எதிர்கொள்ள்
தினம் ஆசையாய் தவமிருந்து,
எதுவுமே துளிக்காத
ஏமாற்ற வானமாய் - எப்போதும்
உள்ளுக்குள் தோற்பது,
நிஜம் பேசுவதை விட கோடி சுகம்..
மனசுக்குப் பிடித்த மனசுக்காய்
தோற்பது,
ஜெயிப்பதை விட ஆனந்த சுகம்!!


Lady -வேதா மஹாலஷ்மி([email protected])

இவரது முந்தைய படைப்புகள்:

1. எல்லாம்தான்....
2. ஜனனம்
3. விளையாட ஒரு பொம்மை
4. மழையில் குடை
5. அறுந்து போன ஒரு இழை
6. முகம்


படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X