குடிக்கிற பழக்கம் கொடியது.. டைமிங்கில் வைரலாகும் பாடல்
சென்னை: குடிக்கிற பழக்கம் கொடியது என்ற பெயரில் முன்னாள் எம்எல்ஏவான பாவலர் கொ.வீ.நன்னன் மேடைப் பாடல் வடிவிலான கவிதை எழுதியுள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.
குறிப்பாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறந்துள்ள இன்றைய தினத்தில் இந்த கவிதை தமிழக சூழலுக்கு ரொம்பவே பொருந்திப் போகக்கூடியதாக உள்ளது. சுய ஒழுக்கம்தான், நம்மை காக்குமே தவிர, மதுபான கடை திறப்பையோ அல்லது மூடலையோ சார்ந்து நாம் இயங்குவது பலனளிக்காது. எனவே மதுவின் தீமை குறித்த இந்த கவிதை கவனம் ஈர்க்கிறது.

அந்த கவிதையை பாருங்கள்:
குடிக்கிற பழக்கம் கொடியது
குடிக்கிற பழக்கம் ரொம்பக் கொடியது... அண்ணாச்சி குடிக்கிற பழக்கம் ரொம்பக் கொடியது-நீ
குடிக்காம இருந்துகிட்டா குடும்பத்தோடு
சந்தோஷமா இருக்க முடியுது
பொழுதும் நல்லாவிடியுது-மதுவை
குடிக்கிற பழக்கம் ரொம்ப கொடியது-(ஆமா...குடிக்கிற)
கெடைக்கிற பணம்காசு வீணாகிப் போகாம
நடக்கிற வாழ்க்கைக்கொரு உதவியாகுது
நல்ல உதவியாகுது
எடுக்கிற முடிவுயெல்லாம்
ஏகோபித்து ஆலோசித்து
எடுத்தாலே வெற்றிக்கொரு
வழிபொறக்குது ஆமா வழிபொறக்குது-(குடிக்கிற)
பெண்டாட்டி புள்ளை குட்டியும்
பெற்றத் தாயும் தந்தையோடு
பொறந்தவங்களும் ஒத்துமையா
வாழக் கத்துக்கணும்-பொதுவென்று
எதுவாக இருந்தாலும் அது நமக்கு
மனத்தாங்கல் இல்லாம பகிர்ந்துக்க வேணும்-(குடிக்கிற)
மதுவகையோ புகையிலையோ
எது ஒன்றைக் குடித்தாலும்
முதுமை அடைந்து அதிவிரைவில்
இளமையைப் போக்கும்
இதுவரை இல்லாத புதுவிதமான நோய்கள்
எலும்புக்குள் உருவாகி உயிரினைத் தாக்கும்
காமாலைவரும் கவலைதரும்
கண்ணுக்குள் ஒருதிரை மூடும்
கோமாளிப் போல் கூனல்விழும்
குக்கி குக்கி இருமல் வரும்
ஆண்மைப் போகும் ஆசைப்போகும்
அப்புறம் என்ன? எல்லாம் போகும்-(குடிக்கிற)
இவ்வாறு அந்த பாடல் உள்ளது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications