For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏம்மா இரவு முழுவதும் அழுதாச்சு.. இன்னும் பாரம் குறையவில்லையோ.. வைரலாகும் கவிதை ட்வீட்டுகள்! #மழை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில பெரும்பாலான இடங்களில் கொட்டி தீர்க்கும் மழையை வர்ணித்து நெட்டிசன்கள் எழுதியுள்ள கவிதைகள் வைரலாகி வருகிறது.

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் சாலைகளில் முட்டி அளவு தண்ணீரில் மக்கள் மிதந்து வருகிறார்கள்.

வரும் டிசம்பர் 3 ஆம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இந்த நிலையில் மழைக்கு சூடாக பஜ்ஜி போண்டா சாப்பிடும் நேரத்தில் நெட்டிசன்கள் கவிஞர்களாகிவிட்டனர் போல!.. நேயர்களுக்காக கவிதைகளின் தொகுப்பு இதோ...

சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! விடிய விடிய வெளுத்த கன மழை! ஆவடியில் 20 செ.மீ கொட்டியதுசென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! விடிய விடிய வெளுத்த கன மழை! ஆவடியில் 20 செ.மீ கொட்டியது

வீட்டிற்குள் வந்த சபிப்போம்

வீட்டிற்குள் வந்த சபிப்போம்

இந்த மண்ணின் அழையா விருந்தாளி அவள்...
வீட்டிற்கு வெளியே இருக்கும் வரை ரசிப்போம்...
வீட்டிற்குள் வந்துவிட்டால் சபிப்போம்...

பாரமின்னும்

பாரமின்னும்

இரவு
முழுவதும் போதாமல்
இன்னும் அழுதுக்
கொண்டிருக்கிறாள் ..
பாரமின்னும்
குறையவில்லையாம் !

கைகரவேல்

கைகரவேல்

ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி
ஊழி முதல்வனுருவம் போல் மெய் கருத்து
பாழியந் தோளுடை பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
"வாழ" உலகினில் பெய்திடாய்

பிளாண் பண்ணி

பிளாண் பண்ணி

சே
கரண்ட்டு போகப்போதுன்னு பிளான் பண்ணி, மோட்டார் போட்டா, இந்த அடிக்கிற மழை சத்தத்துல, டேங்க் ஓவர்ஃப்ளோ ஆனது கூடத் தெரியாம தண்ணி கொட்டி....

English summary
Netisans shared their comments about rain in Tamilnadu. Most of the parts in TN are floating in rain water.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X