For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடடா அடடா அடை மழைடா.. வாசகர்களின் கவித் துளிகள்.. படியுங்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: மழைக் கவிதைகளை எடுத்து விடுங்களேன் என்று கேட்டதுதான் தாமதம்.. இதோ வந்து குவிந்து விட்டன கவிதை சாரங்கள்.. படித்து மழையைக் கொண்டாடுங்கள்...

மழைவர போகுதே
தென்னை மயிலென ஆடுதே
பண்ணை ஆடுகள் ஓடுதே
கன்னம் குளிரிட போகுதே
கோலப் புள்ளிகள் தூரத்தில்
மழை துளி தூவுதே
செம்மண் சிரிக்கிதே
புழுதியில்போர் வெடிக்கிதே
சோழனின் படையினைபோல்
மழை அம்பினை வீசுதே..
மழை நீரை வரவேற்க
மர இலை தலை ஆட்டுதே
மாரிக்கு கூழ் ஊத்தியும்
புத்துக்கு பால் ஊத்தியும்
பெய்யா மழை துளிகள்
புதைத்த கன்று முளைத்ததும்
மணல் திருட்டை தடுத்ததும்
பெய்த தேன்- செய்த சிலை
காப்பாற்றாது செய்யும் செயலே
உம்மை காப்பாற்றும்...

- சிபி, கோவை

 Poems on Rain

--

மழை
நின்றபின்
தென்றல்
வருட
பூக்களை
சிலிர்த்தது
மரம்,
நனைந்த
அவள்
உலர்த்தினாள்
தன்
கூந்தலை,
ஆயிரமாயிரம்
வண்ணங்கள்
பூக்களாய்
என்
நெஞ்சினில்

மழையின் ஈரம்
மல்லிகையை
நனைத்தது,
ஈரமுடன்
மல்லிகையும்
காயந்தது
எஞ்சியது
நெஞ்சில்
அவளது
வாசம்
மட்டுமே

- பொன்ராஜ்

--

பாரதிகவிதையை பேசி பேசி
பகல் போயிருந்தது.

கிளம்பும் நேரம்
பிடித்த மழைக்காக குடை பிடித்தாய்..

குடை பிடிக்கும் கவிதை என்றேன்.

 Poems on Rain

இன்று ஒருநாள்
கவிஞனுக்கு
கவிதை குடை பிடிக்கட்டுமே எனச்
சொல்லி என்னை
உன் குடைக்குள்
இழுத்தாய்.

மழை மேகம் பார்த்தாலே
கலாப மயிலாய்
தோகை விரிக்கிறது
கவிதை உள்ளம்!

- ஸ்ரீராம் நாகசுந்தரம்

--

கைகளை நீட்டி மழையை கடன் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
துளி மழைத்துளி உனக்காக காத்திருக்கும்
இந்த வேளை அது மழைத்துளி

ஆஃபீஸிலிருந்து வெளியே வந்து நிற்கும்போதும் அதே எதிர்பார்ப்பு
அங்கு அவுட்புட் வரவில்லை என்றும் இங்கு உன் புல்லட் வரவில்லை என்றும்
இத்தனை மழையில் நனைந்த என்னை சைட் அடிக்கும் எவனும்
உன்னிடம் தோற்றுத்தான் போவான்
இவ்வளவு நாள் ஆன பிறகும் அப்படி பார்ப்பாயே
உன் வரவை எதிர்பார்க்கும் போது மட்டும்
என் கடிகாரத்தின் முட்களுக்கும் நத்தையின் கால்கள் வந்து விடுகின்றன
என் உடலில் ஊடுறுவும் மழைத்துளியினால் உன் விரல்களின் வருடல்
மட்டும் நியாபகம் வருகிறது

குடையை தேடிப் பார்த்தேன் இல்லை
இருந்தாலும் எடுப்பதாய் இல்லை
உனக்கு நானும் எனக்கு நீயும்தான் குடையாய் மாற வேண்டும்
மழையின் சப்தம்.. வாகனங்களின் சப்தம்
குடையில் படும் மழைத்துளி சப்தம் எதிரே இருக்கும் சனங்களின் சப்தம்
இத்தனை சப்தத்தின் நடுவே உன் புல்லட்டின் சப்தம்
கேட்குமோ என்னவோ உன் வாசம் எனக்குத தெரிந்து விடும்

வந்தாய் வந்து விட்டாய்
எதிரே நின்ற சில பேரின் முகம் மட்டும் வாடியது
நீயோ ரெயின் கோட்டை எடுத்தாய் இப்போது என் முகம் வாடியது
மழையில் உன்னுடன் போகும் சந்தோஷத்தையும்
உடன் கோட்டுன் போகும் வருத்தத்தையும் என்னால் பொறுக்க முடியவில்லை
சரி சென்னையில் நாளையும் மழைதானே!

ஆர். ஆனந்த், சென்னை.

--

அடைமழை

ஒரு வார காலத்திற்கு
அடைமழையாம்..
அதனால் என்ன
இருக்கவே இருக்கிறது..
கொறிப்பதற்கும்
குளிர்காயவும்
உன் நினைவுகள்!

பழ.அசோக்குமார், புதுக்கோட்டை

--

வா..மழையே..

காய்ந்த பூமியின்
கடுமை போக்கிட
வா.. மழையே.. மா மழையே...!

வெடித்த பூமியின்
வேட்கை தீர்த்திட
வேகமாய் வா
வெண் மழையே..!

அழும் விவசாயின்
அழுகை திர்க்க
அமுதமாய் பொழந்திடு
அன்பு மழையே..!

நிறம் இனம் பேதமில்லாமல்
நிறையவே பெய்திடு
நீண்ட மழையே..!!

கனமாய் பெய்து
எங்களை கலங்கவிடாமல் - மெல்லமாய்
இதயம் வருடு..!
இன்ப மழையே.. செல்லமாய்
என்றும் பொழிவாய் எங்கும் நிறைவாய்
தங்க மழையே..!!

- கவிஞர்.அபிரேகா, திருநெல்லிக்காவல்

--

 Poems on Rain

வா மழையே வா!
வா மழையே வா
எங்கள் பூமியில்
புத்துயிர் பெறுவதற்காக
ஏராளமான புற்கள்
காத்துக்கிடக்கின்றன!

வா மழையே வா
எங்கள் குளங்களிலும்
ஏரிகளிலும்
உன் மேனி பட்டு
பிரசவிப்பதற்காக
மீன் முட்டைகள்
காத்துக்கிடக்கின்றன

காகிதத்தில்
கப்பல் செய்து
காத்துக்கிடக்கிறார்கள்
எங்கள் பிள்ளைகள்
சீக்கிரம்
வா மழையே வா!

நாங்கள்
அலுவலகங்களை விட்டுப்
புறப்பட்டுச்
செல்லும்போது
எத்தனையோ பாலங்கள்
இருக்கின்றன
ஒதுங்கிக்கொள்ள
அதனால்
வா மழையே வா!

சூடாக சுவைத்துக்கொண்டே
கையில் தேநீரை
வைத்துக்கொண்டு
வீட்டின் முற்றத்தில்
விழிதிறந்து ரசிக்கின்றோம்
வா மழையே வா!

இரவெல்லாம் கொட்டிக்கொண்டே இரு
நீ
தவழ்ந்து வந்து
எங்கள்
தாழ்வாரங்களில்
விழுகின்ற
ஓசையைக் கேட்டுக்கொண்டே
தூங்க வேண்டும்
அதனால்
வா மழையே வா!

குடைகளைத்
தூக்கியெறிந்துவிட்டு
கடலை வாங்கி
கொரித்துக்கொண்டே
புறப்படுவதற்குத்
தயாராகிவிட்டோம்
உன்னில் நனைந்துகொண்டே
அதனால்
வா மழையே வா!

குழந்தைகள்
இன்றைக்கே
கும்மாளம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்
நாளைக்கு
அரசு விடுமுறை
விட்டுவிடுவார்கள் என்று
அதனால்
வா மழையே வா!

- சி.இராமச்சந்திரன்

--

ஒரு மழை கால
மாலை நேரத்தில் தான்
நம் சந்தித்தோம் . . .
சின்ன புள்ளியில் சிரித்து வைத்தது
காதல் வானில் சிறகடிக்கும் என
நீயும் நானும்
நினைத்து பார்த்திராத தருணம் அது . . .
விட்டு போனது மழை சாரல் மட்டுமே
விட்டு பிரிந்திராத
மேகமாய்
நம் இருவர் கண்களின் ஈரம்
ஒட்டிக்கொண்டது . . .
காதல் . . .
நேசிக்கவும் வைத்து
என்னை சுவாசிக்கவும் வைத்தது உன்னால் . . .
கண்கள் சந்தித்து இதயம் வரையில்
பிறவி போனது உன் ஸ்பரிசம் . . .
காற்று வாங்க கடற்கரை
கைகோர்த்து நடந்தபோது
கூடவே வந்தது நம் கால்தடம்
மட்டுமல்ல காதலும் தான் . . .
எதிர்காலத்துக்காக . . .
இதயத்தை அங்கு விட்டு
இடம்பெயர்ந்ததே விழிகள் . . .
அதில் வழிந்த துளி நீர்
உனக்காகவே நான் என்ற வலிகள். . .
கடைக்கண்ணால் ஜாடை சொல்லி
கால்கள் நடக்க
காலம் உருண்டது . . .
யார் கண்பட்டதோ . . .
சின்ன பிரிவு நிரந்தரமானது . . .
உன்னை தேடி
நாம் நடந்த கடற்கரை யில்
தேடும் அலை போலவே
பழைய நினைவுகளை அசைபோட்டது மனம் . . .
ஒற்றை கால்தடம் மட்டும்
நான் திரும்பி பார்க்கையில் . . .
வெகு தூரம் நடந்தேன்
தாகம் தாங்காமல் கடல் நீரை குடித்தேன் . . .
உப்புக்கரிக்கவில்லை . . .
கரையில் எங்கோ
நீ கால் நனைக்கிறாய் என்று
தெரிந்துகொண்டேன் . . .
விழி நீர் ஈரம் கசிந்து
உதட்டில் உப்புக்கரித்தது . . .
காதல் . . .
என்னை உனக்காக துடிக்கவும் வைத்து
உனக்காக வாழவும்
வைத்துக்கொண்டிருக்கிறது . . . .

காதலுடன் . . .
ரகு. என்

--

விலகும்
போதும்....
விட்டுக்
கொடுக்கும்....
மேகமாய்
மழை....

மண்ணில் நனைவோம்!
மழையின் அன்பில்!!!

- SgS

English summary
Collection of Poems by our readers on Rain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X