For Daily Alerts
தற்காதல் கொள்வீராக !!
சென்னை: இன்று காதலர் தினம்.. உலகெங்கும் அன்பின் வாசம் பரவி வரும் இவ்வேளையில் ஒரு கவிதை.. தற்காதல் குறித்து.
நிழற்படம் எடுக்க ஆருமிலையென
தற்படம் எடுப்போரே
காதலிப்பார் இலையெனாமல்
தற்காதல் கொள்வீராக !!

காதலிப்பதும் காதலிக்கப்படுவதும்
பதில் காதலும் நம் விருப்பமே
காத்திருப்பில்லை ஏமாற்றமில்லை
கனவு கூட நம் கட்டுக்குள்ளே
தற்காதல் கொள்வீராக !!
யாக்கையும்
யௌவனமும் பேணி
யாழிசை மீட்டி
ஆழ்மனம் களிப்புற
தற்காதல் கொள்வீராக !!
- கௌசல்யா
வாலெண்டின் மீம்ஸ்