தந்தையர் தினத்தில் தந்தைக்கோர் தாலாட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அபுதாபி: உலகம் முழுவதும் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் நமது ஓன் இந்தியா தமிழ் தளத்தின் வாசகரான வத்லகுண்டுவை சேர்ந்த சிவமணி என்பவர் தந்தைக்கோர் தாலாட்டு பாடியுள்ளார்.

வத்லகுண்டுவை சேர்ந்த சிவமணி அபுதாபியில் வசித்து வருகிறார். இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தந்தைக்காக அவர் எழுதிய தாலாட்டு கவிதை.. இதோ உங்களுக்காக..

Worlds fathers day Poem from a reader of One india Tamil

தந்தைக்கோர் தாலாட்டு

தாவி வரும் தேன் பாட்டு

முந்தி வரும் என் பாட்டு

விழி மூடி நீ கேளு

அயராது உழைப்பாயே

பிள்ளை மொழி கேட்பீரோ

அன்பாலே நனைப்பாயே

ஆரிராரோ கேட்பீரோ

சிகரம் தொடும் உன் கனவு

சிந்தியாது நீ தூங்கு

சிவந்த விழி குளிர்ந்திட

சிரம் தொட்டுப் பாடுகிறேன்

உன்னைப் போல உறவுமில்லை

உயர்ந்த உள்ளம் பார்த்ததில்லை

உன்னோடு நானிருப்பேன்

உறங்கி விடு என் தகப்பா

மெழுகும் தோற்று போகும்

கல்லும் கண்ணீர் விடும்

முட்பாதையில் பயணித்த

பாச சரணாலயமே என் அப்பா

வாடிடாத வசந்தம் தருவோம்

குறையாத நேசம் தருவோம்

வீழாத அன்பைப் பொழிவோம்

உயிர் தந்த தகப்பனே உலகம் என்போம்

சிவமணி,
வத்தலக்குண்டு

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Worlds fathers day is celebrating today. Our One India tamil website reader has writen a poem for the fathers day.
Please Wait while comments are loading...