உதவிய சாட்ஜிபிடி.. வெறும் 46 நாளில் 11 கிலோ எடையை குறைத்த அமெரிக்க யூடியூபர்.. எப்படி தெரியுமா?
நியூயார்க்: அமெரிக்காவில் 56 வயது நிரபிம் யூடியூபர் ஏஐ-யின் சாட் ஜிபிடியை பயன்படுத்தி 46 நாளில் 11 கிலோ எடையை குறைத்துள்ளார். அவர் என்ன செய்தார்? அவரது உடல் எடையை குறைக்க சாட்ஜிபிடி உதவியது எப்படி? என்பது பற்றிய விவரம் வருமாறு:
அமெரிக்காவை சேர்ந்தவர் குரோன். 56 வயது நிரம்பிய இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் யூடியூப் சேனல் ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில் தான் சமீபத்தில் குரோனின் உடல் எடை அதிகரித்தது. தொப்பை விழுந்ததால் அவர் உடல் எடையை குறைக்க முடிவு செய்தார்.

இதையடுத்து அவர் ஏஐ-யான சாட் ஜிபிடியின் உதவியை நாடினார். சாட்ஜிபிடியிடம் தனது உடல் எடையை குறைக்க தேவையான ஐடியாக்களை அவர் கேட்டார். குறிப்பாக ‛டயட்' பற்றிய விவரங்களை தினமும் கேட்டார்.
இதையடுத்து சாட்ஜிபிடி தினமும் அவருக்கு உடல் எடையை குறைக்கும் வகையிலான ‛டயட்' பிளானை வழங்கியது. அதாவது உடலுக்கு தேவையான கலோரிகளை கணக்கிட்டு அதற்கு ஏற்ப உணவு பட்டியலை வழங்கியது. அதுமட்டுமின்றி உடற்பயிற்சிகள், தூங்கும் நேரம் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு காட்டியது.
குரோன் பின்பற்றிய டயட் உணவு பட்டியலில் குறைந்த அளவில் இறைச்சிகள், ஸ்டீல் கட் ஓட்ஸ், ஆலிவ் எண்ணெய், கீரை வகைகள் இருந்தன. பதப்படுத்தப்பட்ட உணவுகள், சீட் எண்ணெய், சர்க்கரை, பால் பொருட்களை முற்றிலுமாக அவர் நீக்கினார். அதுமட்டுமின்றி தினமும் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து வாரத்தில் 6 நாட்கள் தினமும் 60 முதல் 90 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தார்.
தனது பயிற்சி மற்றும் மீட்சியை ஆதரிக்க, திரு. க்ரோன் தனது தினசரி வழக்கத்தில் கிரியேட்டின், பீட்டா-அலனைன், கொலாஜன், மோர் புரதம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட கூடுதல் பொருட்களைச் சேர்த்தார். இரவில் படுப்பதற்கு முன்பு தொலைக்காட்சி, செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதை தவிர்த்தார். தூக்கத்துக்கு முன்னுரிமை வழங்கினார். தூக்கத்துக்கு முன்பு ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டார். தினமும் 4 லிட்டர் தண்ணீர் குடித்தார். தினமும் சிறிது நேரம் சூரியஒளியில் நின்றார்.
இதன்மூலம் குரோன் வெறும் 46 நாளில் 11 கிலோ எடை குறைந்துள்ளார். 95 கிலோ எடையில் இருந்த குரோன் தற்போது 84 கிலோ எடையில் இருக்கிறார். இதுதொடர்பான போட்டோவை அவர் தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications