ஆடி மாத பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் எவை தெரியுமா?.. நோட் பண்ணுங்க
ஆடி மாத பலன்கள்: ஆடி மாதம் பிறந்தாச்சு. பொதுவாக ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு விசேஷமானது. ஊர்களில் ஆங்காங்கே கோயில் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் என்று விழா கோலம் பூண்டிருக்கும். குல தெய்வ வழிபாடு, உறவினர்கள் சந்திப்பு என்று கோலாகலமாக இருக்கும். 17.7.25 - 18.8.25 வரையிலான ஆடி மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் இன்று (17.7.25) தொடங்கியுள்ளது. ஆடி மாதம் 1 மற்றும் 5 ஆம் தேதி மிகவும் முக்கியம். இந்த வருடம் ஆடி 1 ஆம் தேதி வியாழக் கிழமையும், 5 ஆம் தேதி திங்கள் கிழமையும் அமைந்துள்ளன. இதனால் உலகளவு மழையின் தாக்கம், வெள்ள பாதிப்பு அதிகம் இருக்கும். அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் பெரிய இயற்கை பேரிடர் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. தீ மற்றும் காற்றினாலும் அதிக பாதிப்புகள் இருக்கும்.

ஆடி நிகழ்ச்சிகள்
ஆடி மாதத்தில் சூரிய பகவான் கடக ராசிக்குள் பகவான் பெயர்ச்சி ஆகிறார். ஆடி மாதம் அஷ்ட லட்சுமி கடாட்சம் கொண்டுள்ளது. ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடி பூரம், ஆடிப்பெருக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த மாதத்தில் நடைபெறவுள்ளன. கடவுளின் ஆசி பரிபூரணமாக நிறைந்ததது தான் ஆடி மாதம். ஆடி மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசிநாதன் புதன் ராசியிலேயே வக்கிர நிலையில் உள்ளார். ராசிநாதன் வலுவிழந்திருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அவ்வபோது பிரச்னைகள் வந்து செல்லும். குரு பகவானும் ராசியில் இருக்கிறார். இரண்டாம் இடத்தில் சூரியன் இருக்கிறார். உத்யோகம், தொழிலில் இட மாற்றம் நிகழும். எல்லாவற்றிலும் நன்மை பெருகும். திருமண தடை நீங்கி திருமண யோகம் உண்டாகும். பொருளாதாரம் உயர்வடையும்.
கடகம்
கடக ராசிக்கு 8 ஆம் இடத்தில் சனி பகவான் இருக்கிறார். இரண்டாம் இடத்தில் செவ்வாய் இருக்கின்றார். விரயம் அதிகமாக இருக்கும். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. எல்லாவற்றிலும் போராட்டமும் அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தில் தொல்லைகள் உருவாகும். நண்பர்கள், பகைவர்கள், உறவினர்கள், சொத்துகள் எல்லாவற்றிலும் பிரச்னைகள் இருக்கும். செவ்வாய் பெயர்ச்சி ஆன பிறகு (ஆடி 12) நல்ல பலன்கள் கிடைக்கும். சமூகத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்களின் உதவி கிடைக்கும். உத்யோகம், தொழிலில் மாற்றங்கள் நிகழ்ந்து மனதில் சற்று நிம்மதி ஏற்படும்.
கன்னி
கன்னி ராசிக்கு குரு பகவான் 10 ஆம் இடத்திலும், ஆடி 12 ஆம் தேதி செவ்வாய் உங்கள் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். பெரிய விரயம் இருக்கும். அதை சுபச் செலவாக மாற்றுவது புத்திசாலித்தனம். தொழிலுக்காக புதிய கடன்கள் கிடைக்கும். தொழில் சிறப்பாக இருக்கும். திருமண விவகாரத்து பிரச்னைகளில் தீர்வு கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசிக்கு அஷ்டமத்தில் செவ்வாய் இருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். வீண் விரயம் அதிகமாக இருக்கும். பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்திலும் பிரச்னைகள் ஏற்படும். முன் கோபம் அதிகரிக்கும். எல்லாவற்றிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். ஆரோக்கியத்திலும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாதத்தின் பின் பகுதியில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
-
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம்












Click it and Unblock the Notifications