இதுதான் ஆடி அதிர்ஷ்டம்.. கடக ராசிக்கு அடிக்குது ஜாக்பாட்
ஆடி மாத பலன்: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கவுள்ளது. சந்திரன் வீட்டுக்கு சூரியன் வரும் இந்த அற்புதமான ஆடி மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றங்களால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் ஏற்படும். ஆனி மாதம் முடிந்து தற்போது ஆடி மாதம் பிறக்கப் போகிறது.

ஆடி மாதம் என்பது அம்மனுக்குரிய மாதமாகும். ஆடித் திருவிழா, குலதெய்வ வழிபாடு, நல்ல காரியங்கள், உணவு தானமாகக் கொடுப்பது, அனைத்து கோயில்களின் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். சூரியனின் நகர்வை வைத்தே ஒவ்வொரு மாதமும் கணிக்கப்படுகிறது. சந்திரன் வீட்டுக்கு சூரியன் வரும் மாதமே ஆடி மாதம். ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பானதாகும்.
இந்த ஆடி மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், மேன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடக ராசி பலன்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன் பாக்கிய ஸ்தானத்தில் இருக்கிறார். உங்களின் முயற்சி ஸ்தான அதிபதி புதன் ராசியிலேயே அமர்ந்துள்ளார். கூடவே தன்னம்பிக்கையை அள்ளி கொடுக்கும் சூரியன் பகவானும் ராசியிலேயே இருக்கிறார். இது அற்புதமான பலன்களை கொடுக்கும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
குடும்பம்
உங்களின் முயற்சிகள் ஒவ்வொன்றும் நல்லபடியாக நிறைவேறும். மனதில் இருந்த சஞ்சலங்கள் நீங்கி சற்று தெளிவடைவீர்கள். கடந்த காலங்களில் இருந்த சிக்கல்களுக்கு சற்று தீர்வு கிடைக்கும். உங்களின் புத்திசாலித்தனத்தால் தெளிவாக திட்டமிட்டு அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள். கேது பகவானால் ஞானம், நல்ல அனுபவங்கள் கிடைக்கும். குடும்ப உறவுகளால் ஆதாயம், மகிழ்ச்சி உண்டு.
பணம்
பண வரவு நன்றாக இருக்கும். உத்யோகம், தொழிலில் உயர்வடைவீர்கள். லாபம் சிறப்பாக இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். சுக்கிரன் வலிமைவடைந்து 11 ஆம் இடமான லாப ஸ்தானத்தை பார்க்கிறார். நிலம், புதிய வீடு, வீடு புனரமைப்பு செய்வதற்கான வாய்ப்புள்ளது. வண்டி, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. குல தெய்வத்தின் அருள் அற்புதமாக உள்ளது.
குழந்தைகள்
வீட்டில் அடுத்தடுத்து நல்ல காரியங்களில் மகிழ்ச்சி பொங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். காரியங்களில் இருந்த தடைகள் விலகும். நல்ல உத்யோகம் தேடுவோருக்கு எதிர்பார்த்தபடி நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.
உத்யோகம், தொழில்
உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, விரும்பிய பணியிட மாற்றம் கிடைக்கும். சனி பகவான் ஒன்பதாம் இடத்தில் வக்கிரமாகியிருப்பது உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். தொலை தூரத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். வெளிநாடு முயற்சிகளில் வெற்றி தேடி வரும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிலில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் சிறப்பான வெற்றியை தரும்.
கவனம்
கேது பகவானால் கோபம், ஆக்ரோஷம் அதிகரிக்கும். சற்று பொறுமையை கடைபிடிப்பது அவசியம். குரு 6 ஆம் இடத்தை பார்ப்பதால் கடன் சம்பந்தப்பட்ட விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களின் தகுதிக்கேற்ப நிதியை நிர்வகிக்க வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கலை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பரிகாரம்
ஆரோக்கியத்திலும் மிகுந்த கவனம் அவசியம். ஜீரணம், சர்க்கரை நோய் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் அதிக எச்சரிக்கை வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். அமாவாசை, பௌர்ணமி நாட்களில் குல தெய்வ கோயில் சென்று வழிபடுவதால் காரியங்களில் சிறப்பான வெற்றி கிடைக்கும்.












Click it and Unblock the Notifications