கடக ராசிக்கு ரெண்டு பக்கமும் அதிர்ஷ்டம்.. நகை, பணத்தில் ரொம்ப கவனம்.. வாயால் வரப்போகும் ஆபத்து
Aani Maadha palan: வைகாசி நிறைவடைந்து ஆனி மாதம் தொடங்கியுள்ளது. ஜூன் 15 முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான இந்த காலகட்டத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மிதுனத்துக்கு சூரியன் வரும் மாதமே ஆனி. ஏற்கனவே மிதுனத்தில் குரு அமர்ந்திருக்கிறார். தற்போது குருவுடன் சூரியன் சேர்கிறார். இதனால், உலகத்தில் சில விஷயங்களில் நன்மைகளும், சில விஷயங்களில் பிரச்சனைகளும் ஏற்படும்.

பொதுவாக ஆனி மாதத்தில் பெருமாள், நரசிம்மர், தாயார் வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். கிருஷ்ணர், சிவன் வழிபாடு செய்வது நல்லது. சிவன் கோயில்களில் அன்னதானத்திற்கு பிரசாதம் வாங்கி கொடுப்பது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த ஆனி மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கான பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கடக ராசி பலன்
கடக ராசிக்காரர்கள் கண்டிப்பாக சனிக்கிழமையில் இஷ்ட தெய்வத்தை, குலதெய்வத்தை வழிபாடு செய்வது அனுகூலத்தை தரும். அலர்ஜி, ஒவ்வாமை தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை. இல்லையெனில் பாதிப்புகளைச் சந்திக்கும் வாய்ப்புள்ளது.
பேச்சில் கவனம்
கொடுத்த வாக்கை காப்பாற்றக்கூடிய சூழல் இல்லாமல் போகும். அவசரப்பட்டு குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை தவிர்ப்பது நன்மையை ஏற்படுத்தும். பழைய கடன்கள் பைசல் செய்யக்கூடிய உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி ஏற்படும். மரண பயம் நிச்சயமாக நீங்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
பணம், நகை ஜாக்கிரதை
தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையும். புதிய பொறுப்புகளுக்கு வரக்கூடிய பிராப்தம் உண்டாகும். விலையுயர்ந்த பொருள்களை கையாளும்போது மிகுந்த கவனம் தேவை. நகைகள், பணம், உடைமைகள், ஆவணங்களை வாகனங்களில் வைப்பது, அசால்டாக கையாளுவது போன்றவற்றால் இழக்கும் சாத்தியம் உள்ளதால் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. குறிப்பாக மற்றவர்களின் பொருள்களை கையாளும் போது அதீத எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
கோபத்தை தவிர்க்கவும்
நண்பர்களிடம் கோபதாபத்தை தவிர்ப்பது நல்லது. பொறுப்புகளை சரியாக செய்து முடிப்பதில் அனுகூலம் ஏற்படும். புதிய தொழிலை தைரியமாகத் தொடங்கும் காலகட்டம். அதன் மூலம் வெற்றியை காண்பீர்கள். அரசுத் துறை, அரசியல்வாதிகள் பெருமை மிக்க பதவிகளுக்கு வருவது அனுகூலத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும்.
வெற்றி மேல் வெற்றி
எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படுவது கண்கூடாகப் பார்க்கக்கூடிய காலகட்டம். நீண்ட நாட்களாக இருந்து வந்த தடைகள் தவிடுபொடியாகும் அருமையான காலகட்டமாக இருக்கும். வியாபாரத்தில் அதீதமாக இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும் காலகட்டமாக இருக்கும். மற்றவர்களிடம் பேசும்போது தேன் தடவிய வார்த்தைகளைப் பயன்படுத்துவது நல்லது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications