ரிஷபத்துக்கு பண மூட்டையை அள்ளிக் கொடுக்கும் சனி பகவான்.. ஆனி மாதத்தில் வரும் அற்புதமான யோகம்
Aani Maadha palan: வைகாசி நிறைவடைந்து ஆனி மாதம் தொடங்கியுள்ளது. ஜூன் 15 முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான இந்த காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மிதுனத்துக்கு சூரியன் வரும் மாதமே ஆனி. ஏற்கனவே மிதுனத்தில் குரு அமர்ந்திருக்கிறார். தற்போது குருவுடன் சூரியன் சேர்கிறார். இதனால், உலகத்தில் சில விஷயங்களில் நன்மைகளும், சில விஷயங்களில் பிரச்சனைகளும் ஏற்படும்.

பொதுவாக ஆனி மாதத்தில் பெருமாள், நரசிம்மர், தாயார் வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். கிருஷ்ணர், சிவன் வழிபாடு செய்வது நல்லது. சிவன் கோயில்களில் அன்னதானத்திற்கு பிரசாதம் வாங்கி கொடுப்பது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த ஆனி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கான பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசிக்காரர்கள் காது, மூக்கு, தொண்டை, சைனஸ், ஒற்றை தலைவலி, அலர்ஜி, பற்கள் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் இஷ்ட வழிபாடுகளைச் செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் பேசும்போது வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும்.
கடன்கள் தீரும்
பழைய கடன்களை தீர்த்து முடிப்பதற்கான உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். தேக ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்புகளால் கொஞ்சம் ஓய்வெடுக்கும் சூழல் உண்டாகும். ஆனி மாதத்தில் கொரோனா பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் பலரால் பாராட்டப்படும். தொழில் மேன்மை அடையும்.
அனுகூலம்
பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனுகூலங்கள் காணப்படும். உத்தியோகத்தில் அடுத்தடுத்து ஏற்றம் உண்டாகும். லாபம், சந்தோஷம், அனுகூலம், பெரிய அளவு வெற்றிகள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கக்கூடிய அருமையான காலகட்டம்.
தொழில்
தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அதிகரிக்கும் நேரம். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். சுப காரியத் தடைகள் நீங்க குலதெய்வத்தை வழிபாடு செய்வது அனுகூலமும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். உத்தியோகத்தில் எடுக்கும் முடிவுகள் பெரிய அளவிலான அனுகூலத்தை தரும். அடிமைத் தொழிலில் இருந்து தனிப்பட்ட தொழில் தொடங்கலாம் என நினைத்த ரிஷப ராசியினருக்கு கைகொடுக்கக் கூடிய அனுகூலம் காணப்படும்.
பண வரவு
பெரிய அளவிலான பண அமைப்பு, முதலீடுகள் ஆகியவை கிடைக்கும். சனியின் அனுகூலம் ஏற்படும். தாய் வழி, தந்தை வழி உறவு, பெற்றோர் பெரியோர் விஷயங்கள், ரத்தத்தில் பரவக்கூடிய தொற்று நோய்களில் கவனமாக இருப்பது முக்கியம். புதிய கடன்கள் நீங்கள் நினைத்த வட்டியில் கட்டாயமாக கிடைக்கும். அதுதொடர்பான முயற்சிகள் அனைத்தும் வெற்றியைக் கொடுக்கும்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications