Agni Nakshatram 2026: அக்னி நட்சத்திரத்தில் சுபகாரியம் செய்யலாமா?..செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை?
Agni Nakshatram 2026: மே மாதம் 4 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை அக்னி நட்சத்திர காலமாகும். இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் சுப காரியங்கள் செய்யலாமா, வீடு குடி போகலாமா, என்ன செய்யலாம், செய்யக் கூடாது என்று இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
ஜோதிட ரீதியாக சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இடத்தில் தங்கி பயணிப்பார். அந்த வகையில், பரணி மூன்றாம் பாதத்தில் ஆரம்பித்து கிருத்திகை நட்சத்திரத்தில் முழுவதுமாக சூரியன் சஞ்சரிக்கும் காலமே அக்னி நட்சத்திர காலம் ஆகும்.

கிருத்திகை நட்சத்திரம் என்பது அக்னி பிளம்பான நட்சத்திரமாகும். முருகன் கிருத்திகை நட்சத்திரத்தில் தான் அவதரித்தார். கிருத்திகை என்பதே அக்னி நட்சத்திரம். அந்த நட்சத்திரத்திற்குள் சூரியன் பிரவேசிப்பது தான் அக்னி நட்சத்திர காலம் என்று கூறப்படுகிறது.
அறிவியல் ரீதியாக சூரியன் பூமிக்கு மிக அருகில் வரும் காலமே இந்த அக்னி நட்சத்திர காலமாகும். இந்த காலகட்டத்தில் சூரியனின் கதிர்கள் மிக பக்கமாக இருப்பதால் அதீத தாக்குதலை ஏற்படுத்துகிறது. சூரியன் மிகவும் தீவிரமாக கதிர்வீச்சு தரும். வெப்பநிலை அதிகபட்சமாக உயரும். நிலம், காற்று, நீர் அனைத்தும் சூடாக இருக்கும்.
இந்த காலகட்டத்தில் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். மதிய வெயிலில் வெளியே போகாமல் இருப்பது நல்லது. இலகுவான, குளிர்ச்சியான உணவுகள் சாப்பிடுவது நன்மை பயக்கும். நீர் காய்கறிகள், இளநீர், கம்பங்கூழ், பழைய சாதம் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். வெயிலில் செல்லும்போது குடை, தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
அக்னி நட்சத்திரம் என்பது ஜோதிட ரீதியிலும், இயற்கை ரீதியிலும் வெயில் உச்சத்தை அடையும் காலம். இந்த காலத்தில் உடல்நலத்தை கவனமாக பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
அக்னி நட்சத்திரத்தில் சுப காரியங்கள் செய்யலாமா?
-
அக்னி நட்சத்திர காலத்தில் வாடகை வீட்டுக்கு குடி போகலாம்.
-
திருமணத்திற்கான வேலைகளை எல்லாமே செய்யலாம்.
-
திருமணத்திற்கு பூ வைப்பது, உறுதி செய்வது, நிச்சயதார்த்தம் செய்வது போன்றவர்றை செய்யலாம்.
-
வளைகாப்பு இந்த காலத்தில் செய்யலாமா என்ற கேள்வி அனைவருக்குமே இருக்கும். கண்டிப்பாக செய்யலாம். 5,7,9 மாதத்தில் இருப்பவர்கள் கண்டிப்பாக வளைகாப்பு செய்து கொள்ளலாம்.
-
மஞ்சள் நீராட்டு விழா செய்யலாம்.
-
கடை கட்டுவது, மண்டபம் கட்டுவது போன்றவற்றை செய்யலாம்.
-
குலதெய்வ வழிபாடுகளைச் செய்யலாம்
- அக்னி நட்சத்திர காலத்தில் புதிதாக கட்டிய சொந்த வீடுகளுக்கு குடி போவதை தவிர்ப்பது நல்லது கட்டுதல்.
- மொட்டை அடிப்பது, காது குத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
- மரங்களை வெட்டக் கூடாது.
- கூரை வேய்வது, ஓடு மாற்றும் வேலைகளை தவிர்ப்பது நல்லது.
- விதை விதைப்பதை கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.
- அக்னி நட்சத்திர காலத்தில் ஏதேனும் சுப விஷயங்களை கட்டாயமாக செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தால் கண்டிப்பாக செய்யலாம். அதற்கு முன்பாக குலதெய்வத்துக்கு அல்லது இஷ்ட தெய்வத்துக்கு குளிரான அபிஷேகம் செய்வது நல்லது.
- குறிப்பாக, சிவன் கோயில்களுக்கு அபிஷேக பொருள்களை வாங்கித் தருவது நன்மை பயக்கும். சிவலிங்கத்திற்கு மேல் இருக்கும் தாரா பாத்திரத்திற்கு பன்னீர், இளநீர் வாங்கி கொடுக்கலாம். தயிர், பால் போன்றவற்றை அபிஷேகத்திற்கு வாங்கி கொடுப்பது நன்மை பயக்கும்.
- விலங்குகள், பறவைக்கு தண்ணீர் வைப்பது நல்லது.
அக்னி நட்சத்திர காலத்தில் செய்யக் கூடாதவை என்ன?
வழிபாடு முறைகள்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications