ஏழைகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவுங்கள் தீராத நோய்களும் கடன்களும் தீரும்

நோயும், கடனும் மனிதர்களை பாடாய் படுத்தி எடுக்கும் சம்பாதிக்கும் பணத்தை மருத்துவமனைக்கு செலவு செய்தும் வட்டி கட்டியும் அலுத்து போவார்கள். நோயும் கடனும் தீர எந்த ராசிக்காரர்கள் என்ன தானம் செய்யலாம் என பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகம் முழுவதும் பலகோடி மக்களை கடந்த இரண்டு ஆண்டு காலமாகவே நோய் தொற்றும் பொருளாதார நெருக்கடியும் வாட்டி வதைக்கிறது. நோய் பாதிப்பு ஏற்பட்டால் அதற்காக செலவு செய்ய கடன் வாங்குகின்றன. நோயும் கடனும் நீங்க எளிமையான பரிகாரங்கள் உள்ளன. எந்த ராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

தினந்தோறும் காலையில் எழுந்து குளித்து விட்டு முன்னோர்களையும் சூரிய பகவானையும் வணங்க தீராத நோய்களும் தீரும். நோய் தீர்க்கும் கடவுள் தன்வந்திரி பகவானை அவருக்குரிய மந்திரங்களை கூறி வணங்கினாலும் நோய் நொடியற்ற வாழ்க்கை வாழலாம். சூரியன் கடன் பிரச்சினைகளையும் தீர்ப்பார். தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்யலாம். ஆதித்யஹிருதயம் படிக்கலாம். ஆஞ்சநேயரை பக்தியுடன் வணங்க நோய், கடன் பிரச்சினை விரைவில் தீரும்.

ஏழைகளுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவும், ஆடைகளை தானமாக வழங்கலாம் இது நோய் தீர்க்கும் சிறந்த பரிகாரமாகும். 40 நாட்கள் சைவ உணவுகளை சாப்பிட்டு செவ்வாய்க்கிழமைகளில் தானம் தர வேண்டும். அஸ்வினி, மகம் மூலம் நட்சத்திர நாட்களில் ஏழைகளுக்குப் போர்வை வாங்கித் தர கடன் பிரச்சினை நீங்கும். எந்த ராசிக்காரர்கள் என்ன பொருட்களை தானமாக தர வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம் - விருச்சிகம்

மேஷம் - விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்டவர்கள் மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள். மேஷ ராசிக்காரர்கள் சிவன்கோவில்களுக்கு சென்று வரும்போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல் தானம் செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான பொருட்களை தானம் செய்தால் கடன், நோய் பிரச்சினை நீங்கி செல்வ வளம் பெருகும். குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். விருச்சிக ராசிக்காரர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். கடன்கள் தீர லட்சுமி நரசிம்மரை வழிபட்டு பானகம் தானம் செய்யலாம் கடன் நீங்கி பண வரவு அதிகரிக்கும்.

ரிஷபம் - சுக்கிரன்

ரிஷபம் - சுக்கிரன்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப, துலாம் ராசிக்காரர்கள் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்யுங்கள். இதனால் தடையில்லாத முன்னேற்றம் ஏற்படும். நோயுற்றவர்களுக்கு சாம்பார் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் செல்வம் பெருகும். துலாம் ராசிக்காரர்கள் ஏழை எளியோர்களுக்கு வெண் பொங்கல் தானம் செய்வதன் மூலம் புதிய சொத்துக்கள் வந்து உங்களுக்கு சேரும். மேலும் ஆதரவற்ற இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு படிப்பு உதவித்தொகை செய்வதன் மூலம் பல தலைமுறையாக வாட்டி வதைக்கும் நோய்கள் நீங்கும்.

 மிதுனம் - கன்னி

மிதுனம் - கன்னி

மிதுன ராசிக்காரர்கள் ஏழை மாணவர்களுக்கு படிப்புக்கு பணம் தானம் கொடுப்பதும் நல்லது. மாற்றுத்திறனாளி ஏழை மாணவர்களுக்கு நோட்டு, பென்சில், பேனா வாங்கிக் கொடுக்காலாம். புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்து வெண் பொங்கலை உங்களால் முடிந்த அளவுக்கு தானம் கொடுங்கள். தவறாமல் பித்ரு வழிபாடு செய்ய அனைத்து விதமான செல்வமும் தேடி வரும். கன்னி ராசிக்காரர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும். குருபகவானை தவறாமல் வழிபடவேண்டும்.

கடகம் - சிம்மம்

கடகம் - சிம்மம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்கள் பசுமாட்டுக்கு உணவு தானம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். இது குடும்பத்தில் வறுமையை விரட்டி செல்வத்தை சேர்க்க உதவும். மேலும் ஏழை நோயாளிகளுக்கு மருந்து வாங்கி தானம் கொடுத்தால் உங்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் ஏழைகளுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும். இதன் மூலம் மன உளைச்சல் நீங்கும். மனதில் அமைதி ஏற்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பொருட்களை கேட்டு தானமாக கொடுங்கள் பல தலைமுறைக்கும் புண்ணியம் ஏற்படும்.

 தனுசு - மீனம்

தனுசு - மீனம்

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்கள் செவ்வாய்க் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்தால் வாழ்வு செழிக்கும். மேலும் வயதான பெண்களுக்கும், முதியோருக்கும் அன்னதானம் செய்து பசியை போக்கினால் நல்லது. வியாழக்கிழமை குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து பிறகு பக்தர்களுக்கும் தானம் செய்யலாம். செவ்வாய் அல்லது வெள்ளியில் துர்க்கை அம்மனுக்கு செவ்வரளி மலர் சாற்றி வணங்கலாம். மீன ராசிக்காரர்கள் பவுர்ணமி நாட்களில் ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் அதிகரிக்கும். நல்லெண்ணை தீபம் தானம் செய்யலாம். ஏழைகளுக்கு உதவுங்கள் கடன் பிரச்சினை தீரும்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்கள் ஏழை பெண்களின் திருமணத்துக்கு பண உதவி செய்யலாம். ஏழைகளுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உணவு தானமாக கொடுக்க வேண்டும். மேலும் வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கி கொடுக்கலாம். கோவில்களில் சீரமைப்பு பணிகள் நடக்கும்போது தானம் செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் ஏழைகளுக்கு கதம்ப உணவை அடிக்கடி தானமாக கொடுக்க வேண்டும். இதனால் உங்களுக்கு வரும் பண வரவு இரட்டிப்பாகும். மேலும் ஏழை நோயாளிகளுக்கு மருந்து மாத்திரை வாங்கித் தரலாம்.நோயாளிகளுக்கு உதவி செய்வதன் மூலம் வளமான வாழ்வு அமையும். குலதெய்வ வழிபாடை மறக்காமல் செய்ய வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+