Magaram Rasi Palan: மகர ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. வேலை விஷயத்தில் கவனம்
ஆகஸ்ட் மாத ராசி பலன் 2025: ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறந்துள்ளது. இந்த அற்புதமான ஆகஸ்ட் மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறந்துள்ளது. இந்த மாதம் மிதுன ராசியில் குரு பகவானும், சுக்கிர பகவானும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி வரை இணைந்து இருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் மகாலட்சுமி வழிபாடு செய்வது அற்புதமான மாற்றங்களை கொடுக்கும். நாச்சியார் திருமொழி கேட்பது, படிப்பது வெற்றியைத் தரும்.

தற்போது கடக ராசியில் இருக்கும் புதன் பகவான் சிம்ம ராசிக்குள் பிரவேசமாகியிருக்கிறார். சுக்கிர பகவான் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு வருகிறார். கன்னியில் செவ்வாய், கும்பத்தில் ராகு, மீனத்தில் சனி பகவான் வக்கிரமாக இருக்கிறார். அந்த வகையில், இந்த ஆகஸ்ட் மாதத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ராசிக்கு அதிபதியான சனி பகவான் 3 ஆம் இடத்தில் இருக்கிறார். பல்வேறு பாதிப்புகளையும், சிக்கல்களையும், தடங்கல்களையும் சந்தித்து வருவீர்கள். சனிக்கு 3 வது ஸ்தானம் நல்லது தான். பக்கத்து ஊரில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று காலபைரவருக்கு வழிபாடுவது செய்வது மகர ராசி இளைஞர்களுக்கு அற்புதமான வேலைவாய்ப்பை கொடுக்கும். 2 ஆம் இடத்துக்கு அதிபதியாக இருக்கும் சனி 3 ஆம் இடத்தில் வக்கிரமாக இருக்கிறார். உங்கள் பேச்சில் வலிமை அதிகரிக்கும்.
2 இல் ராகு ஏமாந்துறாதீங்க
பேச்சுக்களில் மிகுந்த தெளிவாக இருக்க வேண்டும். 2 ஆம் இடத்தில் ராகு பகவான் இருக்கிறார். உங்கள் பேச்சில், எண்ணங்களில் பெரிய எதிர்பார்ப்பு உண்டாகும். எதிர்பார்த்தது போன்ற வேலை இல்லை என்று விட்டுவிடக் கூடாது. 2 இல் இருக்கும் ராகு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ஆனால், நீங்கள் ஏமாறாமல் இருப்பது நல்லது. குரு 6 ஆம் இடத்தில் இருப்பதால் அலைந்து திரிந்து செய்யக்கூடிய வேலை உண்டாகும். உணவு டெலிவரி, விற்பனைப் பிரதிநிதி, கார் ஓட்டுநர் போன்ற தொழில் செய்வதில் ஈடுபாடு அதிகரிக்கும்.
பகை வரும்
சிலருக்கு தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்சனை இருக்கும். நம்முடைய கம்யூனிகேஷனால் பகைமை உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. 3 ஆம் இடத்துக்கு அதிபதியான குரு 6 இல் பகைமை இருப்பதால் வீட்டு பெரியவர்களுடன் பகை ஏற்படும். மகர ராசியினருக்கு காதலால் புலம்பக்கூடிய சூழ்நிலை இருக்கும். செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் இருக்கிறார். தாயின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தினால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
வரன் அமையும்
புதன் பகவான் 7 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். பகைவன் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் நல்ல நண்பராக உங்களுக்கு மாறுவார்கள். அருமையான வரன்கள் அமையும் காலகட்டமாக இருக்கும். நல்ல நட்பு அமையக் கூடிய நேரம் இது. தொழில் செய்பவர்களுக்கு நல்ல பார்ட்னர் அமைவார்கள். அஷ்டாமதிபதி 7 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். சில நெருக்கடிகள் ஏற்படும். பிரச்சனை தரக்கூடியவர்கள் நண்பர்களாக வந்து சேருவார்கள்.
ஆரோக்கியம்
17 ஆம் தேதி அஷ்டமாதிபதி ஆட்சியாக வருவதால் தந்தைக்கும், உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அப்பாவின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. 9 ஆம் இடத்திற்கு அதிபதியாக இருக்கும் புதன் பகவான் 7 ஆம் இடத்தில் இருக்கிறார். 2வது திருமணம் குறித்த எண்ணங்கள் ஏற்படும். சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் கைகூடி வரும்.
பதவி உயர்வு
சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்கிறார். நல்ல வேலைவாய்ப்பு உருவாக்கித் தரும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு வேலைவாய்ப்பால் வெளிநாட்டு வாய்ப்புகள் வரும். வேலையில் நல்ல புகழ் கிடைக்கும். 11 ஆம் இடத்தின் அதிபதியாக இருக்கும் செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருக்கிறார். வெளிநாட்டில் இருப்பவர்கள் இரண்டாம் திருமணத்துக்கான உறவுகளைத் தேடினால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
வழிபாடு
9 ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் பூர்வீக பிரச்சனைகள் ஒரு பிரச்சனைக்குப் பிறகு கிடைக்கும். பலருக்கு வேலைமாற்றம் ஏற்படும். உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும். கிட்னி, சிறுநீரக கோளாறு பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. வியாபாரத்தைப் பொருத்தவரைக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருச்சி திருவாணைக் காவல் அகிலாண்டேஸ்வரி வழிபாடு மிகச்சிறந்த நன்மைகளை உங்களுக்கு கொடுக்கும்.












Click it and Unblock the Notifications