ஆகஸ்ட் மாத பலன் 2025: சுக்கிரனின் அருளால் ரிஷபத்திற்கு கொட்டும் பணம்.. திருமண விஷயத்தில் ரொம்ப கவனம்
ஆகஸ்ட் மாத ராசி பலன் 2025: ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறக்கவுள்ளது. இந்த அற்புதமான ஆகஸ்ட் மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதம் மிதுன ராசியில் குரு பகவானும், சுக்கிர பகவானும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி வரை இணைந்து இருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் மகாலட்சுமி வழிபாடு செய்வது அற்புதமான மாற்றங்களை கொடுக்கும். நாச்சியார் திருமொழி கேட்பது, படிப்பது வெற்றியைத் தரும்.

தற்போது கடக ராசியில் இருக்கும் புதன் பகவான் சிம்ம ராசிக்குள் பிரவேசமாகியிருக்கிறார். சுக்கிர பகவான் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு வருகிறார். கன்னியில் செவ்வாய், கும்பத்தில் ராகு, மீனத்தில் சனி பகவான் வக்கிரமாக இருக்கிறார். அந்த வகையில், இந்த ஆகஸ்ட் மாதத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு அற்புதமான மாதமாக இந்த மாதமாக இருக்கும். ராசியாதிபதியான சுக்கிர பகவான் தன ஸ்தானத்தில் தன காரகனோடு சேர்ந்திருக்கிறார். குரு, சுக்கிர யோகம் மிகப்பெரிய லாபம், வாழ்க்கை முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி, எதிர்காலத்தைப் பற்றிய கனவு போன்றவற்றை உருவாக்கித் தரும். சனி பகவான் லாபத்தில் வக்கிரமாக அமர்ந்திருக்கிறது. இதனால் மிகப்பெரிய தொழிலைத் தொடங்கி வெற்றி காண்பீர்கள். பார்ட் டைம், கூடுதல் வருமானம் போன்ற எண்ணங்கள் தோன்றும்.
பண வரவு அதிகரிக்கும்
சுக்கிரன் தன ஸ்தானத்தில் குருவுடன் சேர்ந்து இருப்பதால் பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வாக்கு ஸ்தானத்தில் குரு அமர்ந்துள்ளதால் வாக்கினால் பலரையும் வசியப்படுத்துவீர்கள். முகம், பேச்சு வசீகரம் பெருகும். எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், முயற்சியிலும் இருப்பீர்கள். படித்தவர்கள், ஆன்மீகவாதிகளுடன் தொடர்பு ஏற்படும். குடும்ப பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்பத்துடன் இணைந்து இருப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும்.
தொழில்
புதன் தைரிய ஸ்தானத்தில் அமர்கிறார். பேச்சு, கம்யூனிகேஷன் அதிகரிக்கும். ஆடிட்டிங், வணிகம், ஜோதிடம், கலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். 2 ஆம் இடத்தின் அதிபதி மூன்றாம் இடத்தில் அமர்ந்து பிபிஓ சென்டர்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும். ரிஷப ராசியினர் பலரும் பெயர் மாற்றம் செய்து கொள்வீர்கள். முக்கியமான ஒப்பந்தங்களில் இந்த மாதம் கையெழுத்து போடுவீர்கள்.
ஆரோக்கியம்
சந்திர பகவான் இந்த மாதம் 6 ஆம் இடத்தில் தொடங்கி, 7 ஆம் இடத்தில் முடிக்கிறார். ஆரோக்கியத்தில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். புதிய புதிய செயல்களைச் செய்வீர்கள். செய்கள் வேகம் பெருகும். குடும்பத்தினரின் உழைப்பு உங்கள் பின்னால் இருக்கும். நெருங்கியவர்களின் ஆலோசனை கிடைக்கும். பயணங்கள் நிறைய செய்வீர்கள்.
வாஸ்து குறைபாடு
பயணங்கள் நிறைந்த வாரமாக இருக்கும். தாம்பத்திய வாழ்க்கையில் சிறு குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. 4 ஆம் இடத்தில் கேது பகவான் இருக்கும் இந்த காலகட்டத்தில் குடியிருக்கும் வீடுகளில் வாஸ்து குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பல்லி வீட்டில் சத்தம் இடுகிறதா என பார்க்க வேண்டும். இல்லையெனில் தெய்வ அனுகூலம் குறைவாக இருக்கிறது என்ற அர்த்தம் உண்டாகும். வாஸ்து கோளாறுகள் தென்படுவதற்கான வாய்ப்புள்ளது.
படிப்பில் கவனம்
தாயின் உடல்நலனில் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை, இதயம், வீடு சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் பூர்வீகச் சொத்துகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. படிப்பில் மாணவர்கள் மிகச்சிறந்த வளர்ச்சியைப் பெறுவீர்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். தொழிலில் நல்ல வளர்ச்சி பெறுவீர்கள்.
வாராஹி வழிபாடு
செவ்வாயை சனி பார்ப்பதால் உங்கள் பிள்ளைகள் முரண்டு பிடிக்கும் சூழல் ஏற்படும். 5 ஆம் இடத்தில் இருக்கும் செவ்வாயை சனி பார்ப்பதால் பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. குழந்தை பிறப்பில் பிரச்சனை இருப்பவர்கள் உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. சனி வக்கிரப்பட்டு இருப்பதால் 2 ஆவது திருமணம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏமாறும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. வேலையில் பதவி உயர்வு, புதிய வேலை போன்றவை கிடைக்கும். வாராஹி அம்மனை வழிபடுவது மாற்றத்தையும், ஏற்றத்தையும் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications