Rasi Palan This Week: தனுசு ராசிக்கு அடுத்தடுத்து வரும் நல்ல செய்தி.. ஒரு விஷயத்தில் மட்டும் கவனம்
வார ராசி பலன்: அம்மனுக்குரிய மாதமான இந்த ஆடி மாதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளான ஆடி 18 ஆம் நாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஆடி 19 முதல் 25 ஆம் தேதி வரையிலான ஆகஸ்ட் 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு விஷேசமான மாதமாக ஆடி மாதம் உள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

அந்த வகையில், ஆகஸ்ட் 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சட்டத்திற்குப் புறம்பான விஷயத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் பாதிப்புகளைச் சந்திப்பதற்கான வாய்ப்புள்ளது. தலைவலி, கழுத்து வலி, தோல்பட்டை வலி, சர்க்கரை அதிகமாக இருப்பவர்கள், கை, கால்களில் வலி உள்ளவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நல்ல பலன்களைத் தரும். உடற்பயிற்சிகளைத் தவிர்த்தால் பெரிய பாதிப்புகளில் கொண்டு செல்லும்.
லாபம் அதிகரிக்கும்
லாபங்கள் அபரிமிதமானதாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். குடும்பத்திலும், சமுதாயத்திலும் கொடுத்த வாக்கை காப்பாற்றும் யோகம் உண்டாகும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். முதலீடுகளுக்கு எந்தவித குறையும் இருக்காது. எதிர்பார்க்காத விஷயங்கள் நடக்கும் அனுகூலமான காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி காண்பீர்கள்.
வெற்றி, மகிழ்ச்சி
இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும். தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பது நல்லது. தெய்வ வழிபாடுகளைச் செய்யும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்கள் வருகை, நண்பர்கள் வருகை உண்டாகும். நீங்களும் மற்றவர்கள் வீட்டுக்கு சென்று வருவீர்கள். தொலைதூரப் பயணங்கள் மனதில் சந்தோஷத்தை ஏற்படுத்தும்.
செல்வாக்கு கூடும்
மிகப்பெரிய நம்பிக்கை ஏற்படும். இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் எல்லாம் பரிபூரணமாக நீங்கி அற்புதத்தை ஏற்படுத்தும். தனிப்பட்ட முறையில் உங்களுடைய செல்வாக்குகள் அதிகரிக்கும் முக்கியமான காலகட்டமாக இருக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் அதீத கவனமாக இருப்பது நல்லது. வீண் வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
வழிபாடு
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பண வரவு அதிகமாக இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வியாழக்கிழமையில் தெய்வ வழிபாடு செய்வது நல்லது. அனைத்து விதமான உறவுகளும் மேம்படும்.
-
Rasi Palan This Week: மீன ராசியினரே கவனம்.. சனி தரும் முக்கிய பலன்கள்.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும்












Click it and Unblock the Notifications