இளம்வயதிலேயே கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் உள்ள ராசிகள் யார் தெரியுமா?.. கொஞ்சம் முயற்சி பண்ணா போதும்
Astrology: பொதுவாகவே சில ராசிக்காரர்கள் செல்வம், அதிகாரத்தில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். அந்த வகையில், இளம் வயதிலேயே கோடீஸ்வர யோகம் பெறும் அதிர்ஷ்டம் உள்ள ராசிகள் யார் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்..
ஒவ்வொரு மனிதனுடைய ஆசையுமே பொருளாதாரத்தில் சிறந்த நிலையில் இருக்க வேண்டும். கடின உழைப்பை போட்டு எப்படியாவது ஒரு நல்ல நிலைக்கு வந்துவிட வேண்டும்பது தான் ஒவ்வொருவருடைய ஆசையாக இருக்கும். கோடீஸ்வரராக வேண்டும் என்பதுதான் பெரும்பாலோனோரின் ஆசையாக இருக்கும். ஆனால், எல்லோராலும் கோடீஸ்வரராக முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. அப்படியே சிலர் ஆனாலும் வயதான காலகட்டத்தில் தான் கோடீஸ்வரர் ஆகின்றனர்.

கடைசி காலகட்டத்தில் கோடீஸ்வரனாகி என்ன பலன் என்பதே பெரும்பாலானோரின் எண்ணமாகவும் இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின்படி சில ராசிக்காரர்கள் இளம் வயதிலேயே செல்வ செழிப்பை பெறுவதற்கான யோகம் உள்ளது. கோடீஸ்வரராக அதிர்ஷ்டம் மட்டுமே போதுமா என்றால் நிச்சயமாக கிடைக்காது. அதிர்ஷ்டத்துடன் உங்களுடைய திறமையும் அதில் முக்கிய பங்கு வகிக்கும்.
இயற்கையாகவே சில ராசிக்காரர்கள் செல்வம், பணம், புகழ், அதிகாரத்தில் கவனம் செலுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள். அந்த வகையில், இளம் வயதிலேயே கோடீஸ்வரராகும் யோகம் கொண்ட ராசிக்காரர்கள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மகரம் - கோடீஸ்வர யோகம் பெறுவதில் முதல் ராசிக்காரர்களாக இருப்பவர்கள் மகர ராசிக்காரர்கள் தான். சனி பகவான் ஆட்சி செய்யக்கூடிய ராசியாக நீங்கள் இருப்பதால் அதிர்ஷ்டமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். அறம் சார்ந்து சிந்திக்கக் கூடிய வரைமுறை கொண்ட ராசியாக நீங்கள் இருப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றியைக் காண்பீர்கள்.
சரியான திட்டமிடுதல், பொறுமை, மன உறுதி இருந்தால் இளம் வயதிலேயே கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இலக்குகளை நோக்கியும், லட்சியத்தோடும் பயணிக்க கூடியவர்களாக இருப்பீர்கள். பிரச்சனைகளையும், சிக்கல்களையும் தீர்ப்பதில் திறமை சாலிகளாக இருப்பீர்கள். உங்களுடைய இலக்குகளும், கனவுகளும் நிச்சயமாக நிறைவேறும்.
ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்கள் சுக்கிர பகவானால் ஆளப்படும் ராசியாகும். ஆடம்பரம், செல்வம், அழகு, புகழுக்கு உரியவராக திகழ்ந்து வருபவர் சுக்கிர பகவான். இயற்கையாக ரிஷப ராசிக்காரர்கள் செல்வத்தோடு தொடர்புடையவர்களாகத்தான் இருப்பார்கள் என்று கூறுகிறது ஜோதிட சாஸ்திரம். பங்குச் சந்தை முதலீடுகள், நிலம் சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு அதிக அளவிலான அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். நினைத்த காரியங்களை செய்யக்கூடிய மன தைரியமும் உற்சாகமும் எப்போதும் உங்களுக்கு இருக்கும்.
நிதானம், பொறுமையாக செயல்படுவதால் பணத்தை சீக்கிரமாகவே சந்திக்கும் வாய்ப்பு உருவாகும். உழைப்பில் மிகுந்த நம்பிக்கை கொண்ட நீங்கள் மற்றவர்களிடமிருந்த வேறுபட்டு காண்பீர்கள். கடின உழைப்பால் இளம் வயதிலேயே கோடீஸ்வர யோகத்தை பெறக்கூடியவர்களாக இருப்பீர்கள் என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆடம்பர செலவுகளுக்கும் தயங்காதவர்களாக இருப்பீர்கள்.
விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்கள் மிகுந்த உள்ளுணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். எடுத்த காரியங்கள் அனைத்திலும் கவனம் செலுத்தி வெற்றி பெறக்கூடியவர்களாக இருப்பார்கள். தங்களுடைய இலக்குகள், கனவுகளை நோக்கி செல்லும் மன உறுதி கொண்டவர்களாக இருப்பார்கள். சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள்.
முதலீடுகள், சேமிப்புகள், அறிவுப்பூர்வமான செயல்களால் அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். செய்யும் செயலை சிறப்பாகவும், எளிமையாகவும் செயல்படுத்தி அதன் மூலம் மிகப்பெரிய வெற்றியை அடைபவர்களாக இருப்பீர்கள். கடின உழைப்பால் இளம் வயதிலேயே கோடீஸ்வரராக மாறக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications