ராகு கேது பெயர்ச்சியில் பணவரவை அள்ளும் ராசியினர் யார் தெரியுமா?.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா
ராகு கேது பெயர்ச்சி 2025: நடப்பு ஆண்டில் ராகு கேது பெயர்ச்சி மே 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் பண வரவை அதிகளவில் பெறப்போகும் ராசியினர் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த ராசி மாற்றம் மற்றும் கிரக இயக்கங்களின் மாறுபாடு 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கிரகப் பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன்களையும், சில ராசியினருக்கு கெடு பலன்களையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும்.

2025 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி ராகு பகவான் மீனத்தில் இருந்து கும்பத்துக்கும், கன்னி ராசியில் இருக்கும் கேது பகவான் சிம்ம ராசியை நோக்கியும் பயணம் செய்யவுள்ளனர். கும்பம், சிம்மத்தில் அமரக்கூடிய ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சியானது அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு நீடித்து இருக்கும். வருட கிரகங்களில் சனி பகவானுக்கு அடுத்தபடியாக பலம் பொருந்திய, நீண்டநாள் ஒரு ராசியில் பயணிக்க கூடியது ராகு கேது கிரகங்கள் தான்.
ராகு கேது பகவானை ஜோடி கிரகம், சர்ப்ப கிரகம், நிழல் கிரகம் என்று அழைக்கப்படுகிறது. ஒன்றாகத்தான் இந்த இரு கிரகங்களும் பெயர்ச்சியாவார்கள். நேரெதிர் வீடுகளில் இருப்பார்கள். ராகு கேதுக்கள் பெயர்ச்சியாகி அடுத்த ஒன்றரை வருடங்களுக்கு நிறைய ராசியினருக்கு நன்மையை தருவார்கள். ஒரு ராசிக்காரர்களுக்கு நல்ல சிறப்பான பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு கெடு பலன்களையும் தரும்.
இந்த ராகு கேது பெயர்ச்சியில் பணம் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தை காணப்போகும் ராசியினர் யார். 6 ராசிக்காரர்களுக்கு ராகு கேதுவால் நல்ல பலன் வரவு கிடைக்கும். இருப்பினும், மூன்று ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பண வரவை கொடுக்கும்.
துலாம் - ராகு கேது பெயர்ச்சியால் வருமான ரீதியாக நல்ல ஏற்றத்தை பெற்றுக் கொடுக்கும். 6 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். 3, 6, 10 இல் ராகு இருந்தால் ராஜாவுக்கெல்லாம் ராஜாவாக இருக்கும் அமைப்பாக இருக்கும். வழக்கு, வம்பு, பிரச்சனை, வேலையில்லாமல் இருப்பது போன்ற அனைத்து விஷயங்களையும் தூசு போல கடந்து செல்வீர்கள். அமோகமான அபரிமிதமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். அபரிமிதமான பண வரவு உண்டாகும். தன லாபம் கொட்டும். கடன் சார்ந்த விஷயங்களில் இருந்து விடுதலை அடைவீர்கள். முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும். ஆலய பராமரிப்பு பணிகளைச் செய்வது நல்ல பலன்களைத் தரும்.
ரிஷபம் - பத்தாம் இடத்திற்கு ராகு பகவான் வந்து ஒரு மிக யோக நிலையில் குரு பார்வையில் அமரப் போகிறார். இது வருமான ரீதியாக சிறப்பான அதிர்ஷ்ட பலன்களைக் கொடுக்கும். வருமான ரீதியாக அதிக பண வரவைப் பெறுவீர்கள். கெட்ட விஷயங்கள் நடந்தவற்றை மறந்துவிடுவது நல்லது. 11 ஆம் இடம் எனும் வெற்றி ஸ்தானத்தில் ராகு அமரப் போகிறார். நண்பர்கள், வேறு இனம், வேறுமொழி பேசக்கூடியவர்களாக வெற்றியைக் கொடுக்கும். காதல் திருமணங்கள் நடக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. பெற்றோர் ஆசியுடன் திருமணம் செய்து கொள்வது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டாகும். கடன்கள் அனைத்தையும் கட்டி முடிப்பீர்கள். வீடு, வாகனம், மனை யோகம் உண்டு.
தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டங்களை கொடுக்கும் யோகம் உண்டு. வியாபாரம் தொழிலில் நல்ல வருமானம் உண்டாகும். தனுசு ராசிக்காரர்களுக்கு 3 இல் ராகு 9 இல் கேது உள்ளனர். நரசிம்மர், ஆஞ்சநேயர் கோயில்களுக்குப் போவது நல்ல அதிர்ஷ்டங்களை கொடுக்கும். 9 இல் கேது இருப்பதால் பெற்றோர்களின் தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. 3 ஆம் இடத்தில் ராகுவை குரு பார்ப்பதால் தைரியம் உண்டாகும். நிறைய வெளியூர் பணங்கள் மேற்கொள்வீர்கள்.
வயிறு, ரத்த அழுத்தம், சர்க்கரை விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தைராய்டு இருப்பவர்கள் மாத்திரைகளை சரியாக எடுத்து கொள்வது நல்லது. ஆத்ம ரீதியாக எல்லா நல்ல விஷயங்களும் நடக்கும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். தொழிலில் அதி அற்புதம் ஏற்படும். வசதிகள் பெருகும். ஆனந்தத்தையும், பேரானந்தத்தையும் இந்த ராகு கேது பெயர்ச்சி கொடுக்கும். மேஷம், கன்னி, மிதுனத்துக்கு நல்ல பண வரவு இருக்கும். ஆனால், உங்களுக்கு விரைய பலன்கள் அதிகமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications