Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு பிப்ரவரியில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும்
பிப்ரவரி மாத ராசி பலன்: 2026 ஆம் ஆண்டில் முதல் மாதமான ஜனவரி மாதம் நிறைவடைந்துள்ளது. நாளை பிப்ரவரி மாதம் பிறக்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். இந்த பிப்ரவரி மாதத்தில் குரு பகவான் மிதுன ராசியில் இருக்கப் போகிறார். சந்திரன் தன்னுடைய கடக ராசியில் ஆட்சி வீட்டில் அமர்கிறார். சொந்த வீட்டில் ஆரம்பித்து சொந்த வீட்டிலேயே இந்த மாதத்தை நிறைவு செய்வார்.

கேது பகவான் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கிறார். சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோர் மகர ராசியில் அமர்ந்திருக்கின்றனர். மகரத்தில் செவ்வாய் உச்சமடைந்துள்ளது. கும்ப ராசியில் புதன் பகவானும், செவ்வாயும் அமர்ந்திருக்கின்றனர். மீனத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். அந்த வகையில், இந்த பிப்ரவரி மாதத்தில் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷப ராசிக்காரர்கள் குடும்பம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். துணையுடன் சண்டை சச்சரவுகளை வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. துணையுடனான சிறிய வாக்குவாதங்கள் கூட பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மற்றவர்களுடைய தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பிறர் குடும்ப விஷயத்தில் நீங்களும் தலையிடாமல் இருப்பது நல்லது.
முயற்சிகளில் வெற்றி
ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். கடன்களை அடைத்து முடிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். அடிவயிறு, கழிவுப் பாதையில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும்.
யோகம்
மனதிற்குப் பிடித்த இடங்களுக்குச் சென்று வருவதற்கான யோகம் உண்டாகும். சுற்றுலாத் தலங்களுக்கோ, கோயில்களுக்கோ சென்று வரும் யோகம் உள்ளது. வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். முதலீடுகளுக்கு எந்தவித குறையும் ஏற்படாது. தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும்.
முதலீடுகள் கிடைக்கும்
வண்டி, வாகனம் தொடர்பாக இருந்து வந்த பாதிப்புகள் தீரும். தொழிலில் புதிய முதலீடுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த அது கிடைக்காமல் கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு, முதலீடுகள் கிடைக்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத முதலீடுகள் கிடைக்கும். நன்மைகள் நடக்கக்கூடிய காலகட்டமாக இந்த பிப்ரவரி மாதம் உங்களுக்கு அமையும். மிகுந்த ஏற்றங்களைப் பெற ரிஷப ராசியினர் துர்க்கை வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Magaram: அடித்தாடும் மகர ராசி.. ஜாக்பாட் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
Meenam: குரு சுக்கிரன் அருளால் மீன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு -
Kumbam: வெற்றியை குவிக்கும் கும்ப ராசி.. இந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்க..! -
Dhanusu: தனுசு ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ராஜா வாழ்க்கை வாழ போறீங்க -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல்












Click it and Unblock the Notifications