Mithunam Rasi Palan: மிதுன ராசிக்கு காத்திருக்கு திடீர் அதிர்ஷ்டம்.. பேச்சில் ரொம்ப கவனம்
பிப்ரவரி மாத ராசி பலன்: 2026 ஆம் ஆண்டில் முதல் மாதமான ஜனவரி மாதம் நிறைவடைந்துள்ளது. நாளை பிப்ரவரி மாதம் பிறக்கவுள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். இந்த பிப்ரவரி மாதத்தில் குரு பகவான் மிதுன ராசியில் இருக்கப் போகிறார். சந்திரன் தன்னுடைய கடக ராசியில் ஆட்சி வீட்டில் அமர்கிறார். சொந்த வீட்டில் ஆரம்பித்து சொந்த வீட்டிலேயே இந்த மாதத்தை நிறைவு செய்வார்.

கேது பகவான் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கிறார். சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோர் மகர ராசியில் அமர்ந்திருக்கின்றனர். மகரத்தில் செவ்வாய் உச்சமடைந்துள்ளது. கும்ப ராசியில் புதன் பகவானும், செவ்வாயும் அமர்ந்திருக்கின்றனர். மீனத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். அந்த வகையில், இந்த பிப்ரவரி மாதத்தில் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசிக்காரர்கள் சட்டத்திற்குப் புறம்பானவர்களுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் பாதுகாப்பாக இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. ஆனால், கட்டாயமாக திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். நீண்ட நாட்களாக யாருடனாவது பிரச்சனை இருந்து வம்பு, வழக்கு, கோர்ட், கேஸ் என்று இருந்தால் அந்தப் பிரச்சனைகள் எல்லாம் சுமூகமாகத் தீரும் காலகட்டமாக இருக்கும்.
அனுகூலம்
தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். தொழில் அபிவிருத்தி, உத்தியோக அபிவிருத்தி, வியாபார அபிவிருத்தி ஏற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் படிப்படியாக இருக்கும். அற்புதமான அமைப்பு உள்ளது. நரம்பு, தலைவலி, மயக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
முயற்சிகளில் வெற்றி
யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய ராசியினராக இருப்பீர்கள். யாரிடமும் சிறிய தகராறு, மன வருத்தம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும். சிறிய பிரச்சனைகள் கூட ஏற்படாமல் பார்த்துக் கொண்டால் பெரிய அளவுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். புதிய முயற்சிகளில் அனுகூலமும், ஏற்றத்தையும் ஏற்படுத்தும்.
வழிபாடு
உத்தியோக ரீதியாக பெரிய யோக பலம் உண்டாகும். வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கும் காலகட்டமாக இருக்கும். மிதுன ராசியினர் ஆஞ்சநேயரை அனுதினமும் வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
Magaram: அடித்தாடும் மகர ராசி.. ஜாக்பாட் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
Thulam Rasi Palan: துலாம் ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. மறந்தும் இந்த விஷயங்களை செய்திடாதீங்க -
கோடீஸ்வர யோகம் பெறும் விருச்சிக ராசி.. வேலை விஷயத்தில் வரப்போகும் ஆபத்து.. கவனம் -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Meenam: குரு சுக்கிரன் அருளால் மீன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு -
Kumbam: வெற்றியை குவிக்கும் கும்ப ராசி.. இந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்க..! -
Dhanusu: தனுசு ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ராஜா வாழ்க்கை வாழ போறீங்க -
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications