விநாயகர் சதுர்த்தி: வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி வழக்கு
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கான விதிகளை வகுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கும், டிஜிபிக்கும் உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
சென்னை: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின்போது பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு விதிகளை அறிவிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் 10ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக செல்லவும் தடை விதிக்கப்பட்டது. வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து தனி தனியாக சென்று கரைக்க அனுமதிக்கப்பட்டது.

இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 10ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின்போது பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு விதிகளை அறிவிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருப்பூரை சேர்ந்த வழக்கறிஞரும், இந்து முன்னேற்ற கழக தலைவருமான கே.கோபிநாத் தாக்கல் செய்துள்ள மனுவில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதாகவும், செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு சாலைகளில் சிலைகளை வைத்து வழிபட மக்கள் தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் காரணமாக கொரோனா பரவல் மீண்டும் ஏற்படாத வகையில், நிலையான செயல்பாட்டு விதிகளை வகுக்க வேண்டுமென ஆகஸ்ட் 2ஆம் தேதி தமிழ்நாடு அரசுக்கும், டிஜிபிக்கும் மனு கொடுத்தும், இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கான விதிகளை வகுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கும், டிஜிபிக்கும் உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்து முன்னணி அறிவிப்பு
இதனிடையே தமிழகத்தில் 1.25 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட உள்ளதாக இந்து முன்னிணி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கோவையில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "கடந்தாண்டு கொரோனா காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் எளிமையாக கொண்டாட முடிவு செய்து, ஊர்வலமின்றி நடைபெற்றது.
தற்போது கொரோனா குறைந்து வருவதால் அரசு வர்த்தக நிறுவனங்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு இடங்கள், பூங்காக்கள் வழக்கம்போல் செயல்பட அனுமதித்து உள்ளது. இந்த ஆண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த இந்து முன்னணி மாநில நிர்வாக குழு முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் இடங்களிலும், கோவையில் 4 ஆயிரம் இடங்களிலும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 9 நாட்கள் வரை அந்தந்த ஊர்களில் வழக்கம்போல் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும். விசர்ஜன ஊர்வலமும் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள கோவில்களை காத்திடவே இந்துக்கள் ஒன்றிணைவோம் முழக்கத்துடன் விழா நடைபெற உள்ளது. இதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கும் என்று நம்புகிறோம். அவ்வாறு அனுமதி தராவிட்டால் தடையை மீறி விநாயகர் சதூர்த்தியை நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார் காடேஸ்வரா சுப்ரமணியன்.












Click it and Unblock the Notifications