கடக ராசியினரின் வாழ்க்கையில் முக்கிய ட்விஸ்ட்.. குருப்பெயர்ச்சியில் வரும் சிக்கல்
குருப்பெயர்ச்சி: குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். 2025 மே மாதம் 14 ஆம் தேதி குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். இந்த குருப்பெயர்ச்சியில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி குரு பகவான் என்பவர் தனக்காரகன். குரு பகவான் பணத்துக்கு முக்கியமான கிரகம். தனம், பணம் ஒருவருக்கு நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஜாதகத்தில் குரு நன்றாக இருக்க வேண்டும். சுக்கிரன் சுகபோகத்துக்கு காரணமானவர். சுக்கிரன் கொடுக்கும் பணம் கையில் இருக்கும். ஆனால், குரு பகவான் கொடுக்கக் கூடிய பணம் என்பது பெரிய அளவில் இருக்கும்.

ஓராண்டுக்கு ஒரு முறை குருப்பெயர்ச்சி நடைபெறும். அதன்படி கடந்த 2024 ஆம் ஆண்டு குரு பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருந்தார். இந்நிலையில் வருகிற 14.5.2025 இரவு 11 மணியளவில் குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
பொதுவாக குரு பகவான் நன்மைகளின் அதிபதி என்று அழைக்கப்படுவார். தான் இருக்கும் இடங்களில் அதிகளவு நற்பலன்களை கொடுப்பார். செல்வம், மகிழ்ச்சி, குடும்பம், ஆரோக்கியம் ஆகிய எல்லாவற்றிலும் குரு பகவானின் தாக்கம் இருக்கும். அதனால் தான் குரு பார்த்தால் கோடி நன்மை என்று சொல்வார்கள். அந்த வகையில், இந்த குருப்பெயர்ச்சியில் கடக ராசிக்காரர்கள் பெறக்கூடிய பலன்கள், கிடைக்க கூடிய அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
கடகம்
குரு பகவான் உங்களுக்கு 12 ஆம் வீட்டுக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். அஷ்டம சனி விலகியது நிம்மதி பெரு மூச்சை கொடுத்திருக்கும். நிலம், வீடு, வண்டி, வாகனம் உள்ளிட்ட சொத்துகள் வாங்குவதற்கான பலன்கள் உள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட கஷ்டங்கள் விலகி நன்மை ஏற்படும். கடன் சுமை குறையும்.
உத்யோகம்
அரசியல் துறையினருக்கு நல்ல ஏற்றம் காணப்படும். தாய் வழி உறவால் நன்மைகள் நடைபெறும். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். உத்யோகத்தில் இருந்த தடைகள் விலகி, எதிர்பார்த்தபடி நல்ல உத்யோகம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த இடத்தில் இருந்து கடன் கிடைக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
ஆரோக்கியம்
தொழிலில் லாபம் சீராக இருக்கும். வெளிநாடு செல்வதற்கான முயற்சியில் வெற்றி கிடைக்கும். சுப விரயங்கள் இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கடந்த கால பிரச்னைகள் நீங்கி முன்னேற்றம் இருக்கும்.
கவனம்
அஷ்டம சனி விலகினாலும் கேது இரண்டாம் இடத்திலும், ராகு எட்டாம் இடத்திலும், குரு விரயத்திலும் இருக்கப் போகிறார்கள். இதனால் எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும். உத்யோகத்தில் உயரதிகாரிகளிடம் கவனமாக பேச வேண்டும். உங்கள் ரகசியத்தை கடைபிடிக்க வேண்டும்.
கூடா நட்பு
கூடா நட்பு தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கும். மாணவர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாழ்க்கை துணையுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. காதல் உறவிலும் அதிக கவனம் தேவை. எந்த விஷயமாக இருந்தாலும் நன்கு சிந்தித்து, ஆலோசனை செய்து முடிவு செய்ய வேண்டும்.
தடைகள்
குடும்ப உறவில் அதிக கவனம் தேவை. குடும்பத்தில் அந்நியர் தலையீடு கூடாது. பிறர் குடும்பத்தில் உங்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். செல்போன், சமூகவலைதளங்களை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் வந்து நீங்கும். விரய குருவால் காரியங்களில் சின்ன சின்ன தடைகள் வந்து செல்லும்.
பரிகாரம்
எதிலும் மனம் தளராமல் விடாமுயற்சியுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும். வியாழக்கிழமை தினத்தில் வறுமையில் இருப்போருக்கு அன்னதானம் செய்வதால் வீண் விரயம் தடுக்கப்படும். பார்வதி தேவி வழிபாட்டால் தடைகள் நிவர்த்தியாகி நன்மைகள் பிறக்கும்.
-
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏழரை சனியிலும் மேஷ ராசிக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா.. முழு பலன்கள் விவரம் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசியினர் ஜொலிக்கப் போறீங்க.. ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நல்லவை நடக்கும் காலம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம்












Click it and Unblock the Notifications