குருப்பெயர்ச்சி: ரிஷப ராசியினருக்கு மிகப்பெரிய ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் தங்கமாகும் நேரம்

Subscribe to Oneindia Tamil

குருப்பெயர்ச்சி: மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் குருப்பெயர்ச்சியானது இந்த ஆண்டில் திருக்கணிதத்தின்படி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த குருப்பெயர்ச்சியில் ரிஷப ராசிக்காரர்களுக்கு என்ன விதமான அதிர்ஷ்டங்கள் உண்டாகும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்ப ராசியின் மேல் விழுகிறது. குரு சுபத்துவம் முழுமையான பொருந்திய கிரகம்.

guru-peyarchi-2025-we-will-look-at-the-benefits-of-guru-peyarchi-for-rishabam-people-and-the-deitie

குருவுடைய ஸ்தான பலத்தை விட பார்வை பலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மிதுனம் என்பது குருவுக்கு பாதகத்தை கொடுக்கக் கூடியவர். ஜென்மத்தில் மிதுனத்துக்கு குரு வருகிறார். குருவுடைய வீடான மீனத்தில் சனி ஏற்கனவே குடியிருக்கிறார். இப்போது பெயர்ந்திருக்கும் ராகு கும்பத்தில் வரக்கூடிய அமைப்பு. சிம்மத்தில் கேது இருக்கிறார். இதை வைத்து தான் குருப்பெயர்ச்சியின் பலன் கணக்கிடப்படுகிறது.

குருவுக்கு சிறப்பு பார்வையாக 5, 9, சமசப்த பார்வையாக 7 ஆம் பாதம் உள்ளது. குரு பார்வை படக்கூடிய வீடுகளுக்கெல்லாம் விமோர்சனம் உண்டாகும். அந்த வகையில், துலாம், தனுசு, கும்ப ராசிக்காரர்களுக்கு விமோசனம் கிடைக்கும். குறிப்பாக, துலாம், கும்ப ராசிக்காரர்களுக்கு மொத்த பாவ விமோசனமும் கிடைக்கப் போகிறது. இந்த குருப்பெயர்ச்சியில் ரிஷப ராசிக்காரர்களுக்கான நற்பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம் குருப்பெயர்ச்சி பலன்கள்

ரிஷப ராசிக்காரர்களுக்கு ராசிக்கு 2 ஆம் இடத்தில் குரு பகவான் வருவதால் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற போராட வேண்டியதிருக்கும். ராசிக்கு 6 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் நீண்ட நாட்களாக இருந்து வந்த நோய் நொடிகள் நிவர்த்தியாகும். 10 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் தொழில் மாற்றம், இடமாற்றம் உண்டாகும். வெளிநாட்டில் வேலை தேடி வருபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

முன்னேற்றமான காலம்

பதவி உயர்வு, சம்பள உயர்வு, கெளரவம் மதிப்பு உருவாகும் வாய்ப்புள்ளது. இத்தனை நாட்களாக வேலை வாய்ப்பில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டாகும். சொந்த தொழில் தொடங்குவதற்கான யோகம் உண்டாகும். தொழிலை முன்னேற்றுவது, அதில் அதிக லாபம் காணும் வாய்ப்புண்டு. பெண்களுக்கு மிகப்பெரிய யோகம் உண்டாகும். மேக்கம் தொழில், சினிமா, கலைத் துறையில் இருப்பவர்கள், வேலை தேடுபவர்களுக்கு அற்புத பலன்கள் உண்டாகும்.

பண வரவு கொட்டும்

பண விஷயத்தில் மிகப்பெரிய நிறைவு தன்மை ஏற்படும். நீண்ட நாட்களாக வராத பணங்கள் வந்து சேரும். ஜென்மத்தில் இருந்த குரு தன ஸ்தானத்துக்குப் போவதால் பண வரவு அதிகரிக்கும். மனைவியின் சொல் பேச்சு கேட்டு நடப்பது நன்மை பயக்கும். 6 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் நோய் நொடிகள் அனைத்தும் நிவர்த்தியாகும் காலகட்டமாக இருக்கும். எதிரிகளைக் கண்டறிவதற்கான நேரமாக அமையும், அதற்கு ஏற்றாற்போல செயல்படுவீர்கள்.

குலதெய்வ வழிபாடு

8 ஆம் இடத்தில் குரு பார்வை வருவதால் திடீர் பண வரவு, திடீர் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. 10 ஆம் இடத்தில் குரு பார்ப்பதால் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்ய அற்புதமான காலகட்டமாக இருக்கும். குலதெய்வ வழிபாடு செய்வது அருமையான பலன்களைத் தரும். 12 ராசிகளில் ரிஷப ராசியினருக்கு அதீத யோக பலன்கள் கிடைக்கும்.

வார்த்தைகளில் கவனம்

ரிஷப ராசிக்காரர்கள் கஞ்சனூர் சுக்கிர ஸ்தலத்தில் வழிபாடு செய்வது மன நிம்மதியைத் தரும். வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். காது மூக்கு தொண்டை, அலர்ஜி, சைனஸ், ஒற்றை தலைவலி, மூச்சுவிடுவதில் உள்ள குறைபாடுகளில் கவனமாக இருக்க வேண்டும். சனி 11 இல் இருப்பதால் வரும் இரண்டரை ஆண்டுகளுக்கு அருமையான நேரமாக இருக்கும். இதனைப் பயன்படுத்திக் கொண்டால் அற்புதமான பலன்கள் கிடைக்கும்.

ஆரோக்கியத்தில் கவனம்

தேக ஆரோக்கியத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். மரண பயம் நீங்கும். மன அழுத்தம் தீரும். பெரிய பொறுப்புகளுக்கு வருவதற்கான வாய்ப்புள்ளது. நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தாலும் கூட வேலையை விட்டுவிட்டு தனி தொழில் தொடங்குவதற்கான யோகம் உண்டாகும். திட்டுவது, கத்துவது, கோபப்படுவதை தவிர்ப்பது நல்லது. வார்த்தையில் ரொம்ப கவனம்.

அனைத்து விஷயங்களுமே நன்றாக இருந்தாலும் காது, மூக்கு, தொண்டை விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிர்ஷ்டம் கொட்டும் ஆண்டாக இந்த ஆண்டு உங்களுக்கு அமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+