குருப்பெயர்ச்சி 2025: கோடீஸ்வர குபேர யோகம் பெறும் 7 ராசியினர்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா
குருப்பெயர்ச்சி: 2025 மே மாதம் குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். இந்த குருப்பெயர்ச்சியில் குபேர யோகம் பெறும் ராசியினர் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஓராண்டுக்கு ஒரு முறை குருப்பெயர்ச்சி நடைபெறும். அதன்படி கடந்த 2024 ஆம் ஆண்டு குரு பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருந்தார். இந்நிலையில் வருகிற 14.5.2025 இரவு 11 மணியளவில் குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

பொதுவாக குரு பகவான் நன்மைகளின் அதிபதி என்று அழைக்கப்படுவார். தான் இருக்கும் இடங்களில் அதிகளவு நற்பலன்களை கொடுப்பார். செல்வம், மகிழ்ச்சி, குடும்பம், ஆரோக்கியம் ஆகிய எல்லாவற்றிலும் குரு பகவானின் தாக்கம் இருக்கும். அதனால் தான் குரு பார்த்தால் கோடி நன்மை என்று சொல்வார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி குரு பகவான் என்பவர் தனக்காரகன். குரு பகவான் பணத்துக்கு முக்கியமான கிரகம். தனம், பணம் ஒருவருக்கு நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஜாதகத்தில் குரு நன்றாக இருக்க வேண்டும். சுக்கிரன் சுகபோகத்துக்கு காரணமானவர். சுக்கிரன் கொடுக்கும் பணம் கையில் இருக்கும். ஆனால், குரு பகவான் கொடுக்கக் கூடிய பணம் என்பது பெரிய அளவில் இருக்கும். குரு பகவானுடைய துணை இல்லாமல் செல்வந்தராகவோ, கோடீஸ்வரராகவோ முடியாது. இந்த குருப்பெயர்ச்சியில் எந்த ராசியினருக்கு எல்லாம் கோடீஸ்வர குபேர யோகம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு 3 ஆம் இடத்தில் குரு பகவான் இருக்கிறார். 3 ஆம் இடத்தில் இருந்து மேஷ ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தைப் பார்க்கிறார். குருவின் பார்வை பாக்கிய ஸ்தானத்தில் படுவதால், முன் ஜென்மத்தில் வாழ்க்கையில் செய்த நல்ல வினைகளுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். மேஷ ராசிக்கு இது சகாய குரு. நீங்கள் எந்தவொரு முயற்சியை எடுத்தாலும் குரு பகவானின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். சிறு முயற்சி எடுத்தாலே மிகப்பெரிய அளவில் கோடீஸ்வரராவதற்கான வாய்ப்புள்ளது
ரிஷபம்
ரிஷபத்துக்கு குரு பகவான் தன ஸ்தானத்தில் 2 ஆம் வீட்டில் இருக்கிறார். தன ஸ்தானத்தில் தனக்காரகன் இருப்பது மிகப்பெரிய ராஜயோகத்தைக் கொடுக்கும். குரு பகவான் பணத்தைக் கொடுக்கக்கூடிய முக்கிய பகவான். ரிஷபத்துக்கு குரு அஷ்டமாதிபதியாக இருந்தாலும், கோடீஸ்வரராக உள்ள ரிஷப ராசிக்காரர்களின் ஜாதகத்தில் குரு பகவான் நல்ல இடத்தில் இருப்பார். அஷ்டமாதிபதி மட்டும் இல்லை ரிஷப ராசியைப் பொருத்தவரை லாபாதிபதியும் குரு பகவான் தான். குரு பகவான் நினைத்தால் மட்டுமே உங்களுக்கு லாபத்தைக் கொடுக்க முடியும். அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் மிகப்பெரிய கோடீஸ்வர யோகத்தை குரு தரப் போகிறார்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு கூடவே தற்போது குரு பகவான் இருப்பதால் நீங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் வாழ்க்கையில் அபரிமிதமான முன்னேற்றம், வளர்ச்சியைப் பெறுவீர்கள். சாதாரணமாக தொடங்கும் வியாபாரம் கூட மிகப்பெரிய வளர்ச்சியைக் கொடுக்கும். உங்களுடைய வாழ்க்கையில் திடீர் அதிர்ஷ்டம், திடீர் மாற்றம், திடீர் திருப்பத்தைக் கொடுத்து முன்னேற்றம் அடையச் செய்வார் குரு பகவான்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்தில் குரு பகவான் வருகிறார். சிம்மத்துக்கு குரு பகவான் முக்கியமான கிரகம். பூர்வ புண்ணி ஸ்தானதிபதி லாப ஸ்தானத்தில் இருப்பதால் எடுக்கக்கூடிய முயற்சிகளில் எல்லாம் அபரிமிதமான வெற்றியைக் காண்பீர்கள். முன்ஜென்மத்தில் செய்த நல்ல பலன்களுக்கான பலன்களைத் தரக்கூடிய காலம். சிறிய முயற்சி எடுத்தாலும் மிகப்பெரிய அளவிலான வெற்றியைப் பெறலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில் ஸ்தானத்தில் குரு பகவான் ஒரு வருட காலம் இருக்கப் போகிறார். எடுக்கும் சிறு முயற்சியும் வெற்றி, முன்னேற்றத்தை தரும். தொழில் ரீதியாக பல வளர்ச்சியைக் கொடுத்து பெரிய செல்வந்தராக அதிகப்படியான வாய்ப்பு உண்டு.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு அஷ்டமத்தில் குரு பகவான் இருக்கிறார். குரு அஷ்டமத்தில் இருந்தாலும் உங்கள் ராசியின் தன ஸ்தானத்தைப் பார்க்கிறார். 2 மற்றும் 4 ஆம் வீட்டை பார்ப்பதால் வீடு, வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பெட்டி, பெட்டியாக பண வரவு அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசிக்கு குருவின் 9 ஆம் பார்வையாக உங்கள் ராசியின் தன ஸ்தானமான இரண்டாம் வீட்டைப் பார்க்கிறார். இதனால் மகர ராசிக்கு மிகப்பெரிய வளர்ச்சியைக் கொடுப்பார். மகரத்துக்கு விரையாதிபதி குரு. விரையாதிபதி தன ஸ்தானத்தை பார்ப்பதால் மிகப்பெரிய ராஜயோகம் உங்களுக்கு உண்டாகும்.
-
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
குருப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு என்ன பலன்?.. யாருக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது! -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
2026 குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு கிடைக்கும் 5 பெரிய யோகங்கள்!.. லிஸ்ட் பெருசா இருக்கே -
கடன் தீரும் அமைப்பு.. சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம்.. இந்த வாரத்தில் குட்நியூஸ் உறுதி -
Mithunam Rasi Palan: கொடிகட்டி பறக்கப்போகும் மிதுன ராசி.. தொட்டது துலங்கும் யோகம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு ஜூன் 7க்குள் வரப்போகும் குட்நியூஸ்.. அதிர்ஷ்டம் காத்திருக்குது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications