குருப்பெயர்ச்சி: சிம்ம ராசிக்கு அஷ்டமசனியிலும் அதிர்ஷ்டம்.. யோகத்தை அள்ளிக் கொடுக்கும் குரு பகவான்
Guru Peyarchi 2026: குருப்பெயர்ச்சி இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. குரு பகவானின் இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் நிலையில், சிம்ம ராசியினருக்கு இது எந்த அளவில் அதிர்ஷ்டத்தையும், சவால்களையும் தரப் போகிறது என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றங்களானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி, குரு, ராகு கேது ஆகிய கிரகங்களே ஒருவரின் வாழ்க்கையில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு வருடத்திற்கு ஒருமுறை குருப்பெயர்ச்சியும், இரண்டரை வருடத்திற்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி, ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை ராகு கேது பெயர்ச்சியும் நடைபெறுகிறது.

குரு பகவானுக்கு இயற்கை சுபர் என்று பெயர். ஒருவரின் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்க குரு பகவானே காரணமாக இருப்பார். குருப்பெயர்ச்சி என்பது ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளில் ஒன்றாகும். குரு (வியாழன்) ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்வதால், 12 ராசிகளுக்கும் பல்வேறு நல்ல மற்றும் சவாலான பலன்களை ஏற்படுத்தும். கல்வி, வேலை, திருமணம், பணவரவு போன்ற முக்கிய வாழ்க்கை அம்சங்களில் குருவின் இடமாற்றம் பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.
அந்த வகையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் குருப்பெயர்ச்சியானது சிம்ம ராசியினருக்கு என்ன பலன்களை கொடுக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சிம்மம் (Simmam Rasi Palan)
சிம்மம் ராசியினருக்கு இந்த குருப்பெயர்ச்சி நல்ல மாற்றங்களைத் தரக்கூடியதாக அமையும். 6 ஆம் இடத்துக்கு அதிபதியான சனி பகவான் 8 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் நிறைய பிரச்சனைகள், சவால்களை சந்தித்து வந்திருப்பீர்கள். ஜூன் மாதம் நடைபெறவுள்ள குருப்பெயர்ச்சியானது உங்களுக்கு பல நன்மைகளைத் தரும். அஷ்டம சனியின் பாதிப்புகள் பரிபூரணமாக நீங்கும்.
குரு உச்சம்
வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய அவமானங்கள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். இதுவரை பட்டு வந்த கஷ்டங்கள், அவமானங்கள் எல்லாம் விலகும். பூர்வ புண்ணியாதிபதி உச்சமடைகிறார். கடந்த காலங்களில் செய்த புண்ணியங்களுக்கான பலன்களை இந்த காலகட்டத்தில் அடைவீர்கள். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். வெளிநாட்டில் பிரச்சனைகளை சந்தித்தவர்கள் வேறொரு நாட்டில் வாழக்கூடிய யோகம் ஏற்படும்.
சொந்த வீடு
ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த உடல்நலக் கோளாறுகள் பரிபூரணமாக நீங்கும். மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்களுக்கு கூட ஏற்றம் ஏற்படும். குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தைப் பார்ப்பதால் நன்மைகள் ஏற்படும். 4 ஆம் ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால் வீடு, மனை, வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். சொந்த வீடுகளை உங்கள் மனதிற்குப் பிடித்தது போல வாங்கி மகிழ்வீர்கள்.
யோக பலன்கள்
தாயாரின் உடல்நிலையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். தாயார் தொடர்பான மனக்கவலைகள், கலக்கங்கள் நீங்கும். புதிய வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். குரு பகவான் ரோக ஸ்தானத்தைப் பார்ப்பதால் எதிரிகள், நோய்கள் பரிபூரணமா விலகும். நினைத்த வேலை கிடைக்கும். குடும்பத்தில் முன்னேற்றம் உண்டாகும். வெளிநாடு செல்லும் யோகம், பணத்தை சேமித்து வைக்கக்கூடிய தன்மை ஏற்படும்.
வழிபாடு
நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். திட்டமிட்ட விஷயங்களில் ஏற்றம் உண்டாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். தொழிலில் மேன்மை ஏற்படும். ஸ்ரீரங்கம் பெருமாள் வழிபாடு உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications