குருப்பெயர்ச்சி: அதிர்ஷ்டத்தை அள்ளும் தனுசு.. பண மழையில் நீச்சல் அடிக்க போறீங்க.. இதுல மட்டும் கவனம்
குருப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் தனுசு ராசிக்காரர்களுக்கான பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். 2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி ஆரம்பமாகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்ப ராசியின் மேல் விழுகிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள். அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் தனுசு ராசிக்காரர்கள் என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு குருப்பெயர்ச்சி பொன்னான காலகட்டமாக இருக்கும். தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். மிதுனத்தில் குரு அமர்ந்துள்ளதால் பல பேருக்கு திருமணத்திற்கான நிச்சயம் ஆகியிருக்கும். திருமணத்திற்கான யோகம் உண்டாகும். நிறைய பேர் புதிய தொழிலைத் தொடங்குவார்கள். வாழ்க்கையில் பணத்தைப் பார்க்கவில்லை, பதவி உயர்வையே பார்க்கவில்லை, வாழ்க்கையில் திருப்தியே இல்லை, நண்பர்கள் நீண்ட காலமாகவே இருந்ததில்லை போன்ற அனைத்துப் பிரச்சனைகளும் தீரும். பொன்னான நற்செய்தி உண்டாகும்.
குரு பார்வை மிதுனத்தில் இருந்து துலாமின் மீது விழுவதாலும், லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதாலும் பெண்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். லாபங்கள் நிறைய கொடுக்கும். மிகப்பெரிய வெற்றிகள் கொடுக்கும். நிறைய பேர் கணவன், மனைவி பெயரில் வீடு வாங்கும் யோகம் உண்டாகும். கோயில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நடக்கும். பதவி உயர்வுகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
2 ஆம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்துக்கு ராகு வந்து அமர்கிறார். அதற்காக அச்சப்பட வேண்டாம். குரு பார்வை இருப்பதால் பேச்சு, எண்ணங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிஸ்டம், ஐடி, சாஃப்ட்வேர், கம்யூனிகேஷன், ஆடிட்டிங் போன்ற துறைகளில் நல்ல விஷயங்கள் நடக்கும். நீண்டகாலமாக விற்க முடியாத வீடுகளை விற்கக்கூடிய யோகம் உண்டாகும்.
ராசி, லக்னத்தில் குரு பார்வை இருப்பதால் 18, 36, 52, 78 ஆண்டுகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் பூரண குணமாகும். மிதுனத்தில் குரு அமர்வதால் வாழ்க்கை துணை ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். நரம்புகள் பாதிப்பு, தோல் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இரண்டாவது குழந்தை யோகம் உண்டாகும். பெரிய பணம் வந்து உங்களுடைய கடனை அடைக்கும் சூழல் உண்டாகும்.
குரு பார்வை இருப்பதால் கடனை அடைப்பீர்கள். உங்களுக்கு வரக்கூடிய பணம் பெரும் பணமாக இருக்கும். 7 ஆம் இடம், லக்னம், மூன்றாம், இடம், லாப ஸ்தானமாகவும் இருப்பதால் கையில் இருப்பு பணம் அதிகரிக்கும். குழந்தைகள், மாணவ, மாணவிகளுக்கு அருமையான காலகட்டமாக இருக்கும். ராகு 3 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் வாகனங்களில் சாகசம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
யாரிடம் செல்போனில் பேசினாலும் கவனமாக பேச வேண்டும். நீங்கள் பேசுவதை பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். 3 ஆம் இடத்தில் ராகு அமர்வதால் ஆன்லைன் மோசடிகளில் சிக்கும் வாய்ப்பு ஏற்படும். மீடியா துறையில் இருப்பவர்கள், போட்டோகிராஃபர்கள், டிஜிட்டல் மார்க்கெட்டிங், பிராண்டிங் செய்பவர்களுக்கு அமோகமான காலகட்டமாக இருக்கும்.
தனுசு ராசி நண்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியில் வராத அனைத்து நல்ல பலன்களும் உங்களைத் தேடி வரும் என்பது பெரிய அதிர்ஷ்டமாகும். மாணவர்களுக்கு பொன்னான காலகட்டமாக இருக்கும். விரும்பிய துறைகள் கிடைக்கும். லாப ஸ்தானத்தில் குரு பார்வை இருப்பதால் கோடி நன்மைகள் கிடைக்கும்.
சந்தோஷ ரீதியாக 100க்கு 85 சதவீதம் நன்றாக இருக்கும், பொருளாதாரத்தில் 90 சதவீதமான ஏற்றம் உண்டாகும். மகிழ்ச்சி, நிம்மதி உண்டாகும் அமோகமான காலகட்டமாக இருக்கும்.
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள்:- செல்போனில் பேசும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பதிவு செய்து கொள்வதற்கான வாய்ப்பு உண்டு. ஆன்லைன் மோசடி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணை ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.
செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன?:- வாழ்க்கை துணையுடைய குல தெய்வ கோயிலுக்குச் சென்று தேன் அபிஷேகம் செய்வது, அதனை கண் குளிர பார்ப்பது நல்லது. பெருமாளுக்கு தேன் அபிஷேகம் செய்வது நல்ல பலன்களைத் தரும்.












Click it and Unblock the Notifications