குரு பெயர்ச்சி 2023: மேஷ ராசியில் ராகு உடன் குரு பயணம்..தோஷமா? யோகமா?..யாருக்கு பரிகாரம்
சென்னை: சுப கிரகமான குருபகவான் மீன ராசியில் இருந்து இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். வரும் 22ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழ்வதால் பரிகார தலங்களில் சிறப்ப வழிபாடுகள் நடைபெற உள்ளன. சிறப்பு யாகங்களும் பரிகார வழிபாடுகளும் நடைபெறுகின்றன. இந்த குரு பெயர்ச்சியால் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
குருவும் ராகுவும் இணைந்து ஒரே இராசியில் இருந்தால் குருசண்டாள யோகம் ஏற்படும். இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். இந்த யோகம் அமையப் பெற்றால் வாழ்வின் திடீர் உயர்வையும் எதிர்பாராத தனவரவையும் உண்டாக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும், நட்பும் உண்டாகி மகிழ்ச்சி அளிக்கும்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு ஜென்ம குருவாக ராகு உடன் இணைகிறார். எங்கிருந்து பணம் வருகிறது என்று சொல்லமுடியாத அளவிற்கு பணமழை பொழியப்போகிறது. கணவன் மனைவிக்குள் இருந்த குழப்பங்கள் நீங்கும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இந்த ஆண்டு சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். நிறைய ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். வியாழக்கிழமை குரு ஓரையில் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்: வீண் விரைய செலவுகள் வரும். கெளரவத்துக்காக செலவு செய்வதை நிறுத்துங்கள். வீணாக சேமிப்புகளைக் காலி செய்ய வேண்டாம்.எந்தவொரு காரியத்திலும் குடும்பத்தாருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுங்கள். குடும்பத்தில் சின்னச் சின்ன விஷயங்களை எல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம். கடன் பட்டாவது சொந்த வீடு கட்டுவீர்கள். புதிய வண்டி வாகனங்கள் அமையவும் வாய்ப்பு உண்டு.

மிதுனம்: கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகம் ஆவார்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு கிடைக்கும். பிரபலங்கள், அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். வங்கிக் கடனுதவி கிட்டும். மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் பிறக்கும்.

கடகம்: அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். எந்த விஷயங்களையும் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. அலுவலகத்தில் வேலைப்பளு கூடும். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். எந்த வேலையை முதலில் முடிப்பது என்று குழப்பமும் டென்ஷனும் அதிகரிக்கும்.

சிம்மம்: ஒன்பதாம் வீட்டில் பாக்ய குருவாக ராகு உடன் பயணம் செய்யப்போகிறார். குரு பகவானின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கப்போகிறது. முக மலர்ச்சியோடு உற்சாகமாக செயல்படுவீர்கள். குரு பலன் வந்து விட்டதால் திருமணம் கைகூடி வரப்போகிறது. எந்த காரியம் என்றாலும் கவனமாக கையாள்வது நல்லது. மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுவது அவசியம். கவனமாக படித்தாலே நல்ல மதிப்பெண்கள் பெறலாம். நினைத்த காரியம் கைகூடி வரும். வியாழக்கிழமை அனுமனையும், விநாயகரையும் வழிபட நன்மைகள் நடைபெறும்.

கன்னி: மறந்தும் கூட யாருக்கும் பணத்தை கடனாக கொடுத்து ஏமாந்து போகாதீர்கள். தொழில் வியாபாரத்தில் அகலக்கால் வைக்காதீர்கள். நீங்கள் கடனாக கொடுக்கும் பணம் உங்களுக்கு திரும்ப வர வாய்ப்பில்லாமல் போய்விடும் கவனம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணம் விசயத்தில் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வேலையில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்காது தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. படிப்பில் அக்கறை செலுத்தினால் மட்டுமே மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். குரு அருள் கிடைக்கவும் குல தெய்வத்தின் அருள் கிடைக்கவும் பொங்கல் வைத்து வழிபட நன்மைகள் நடைபெறும்.
பணவரவு: மேஷத்தில் குருவும் ராகுவும் நின்றால் இரட்டை நாக்கு கொண்டவர்களாக இருப்பார்கள். பணவரவிற்கு பஞ்சமிருக்காது. ரிஷபத்தில் குருவும் ராகுவும் இருந்தால் இவர்களுக்குப் பிறகு பிறக்கும் சகோதரரோ அல்லது சகோதரியோ மிகப் பெரிய அளவில் சாதிப்பார்கள். அதீத தன்னம்பிக்கையோடு இருப்பார்கள்.
சொத்து கிடைக்கும்: மிதுனத்தில் குருவும் ராகுவும் இருந்தால் தாயாருக்கு அவ்வப்போது ஆரோக்கியத்தில் பிரச்னை ஏற்படும். கடகத்தில் குருவும் ராகுவும் நின்றிருந்தால், பூர்வீகச் சொத்து விஷயத்தில் பிரச்னைகள் வந்து நீங்கும். சிம்மத்தில் குருவும் ராகுவும் இருந்தால் பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும். கன்னியில் குருவும் ராகுவும் இருந்தால் வாழ்க்கைத் துணைவர் வழியே நிறைய உதவிகள் கிடைக்கும்.
வாழ்வில் முன்னேற்றம்: துலாம் ராசியில் குருவும் ராகுவும் இடம் பெற்றிருந்தால் தீவிரவாத இயக்கங்கள் மீது ஆதரவு இருக்கும். விருச்சிகத்தில் குருவும் ராகுவும் இருந்தால் தன்னைத்தானே நெறிப்படுத்திக் கொண்டு முன்னேறுவார்கள். தனுசில் குருவும் ராகுவும் இடம் பெற்றிருந்தால் பல துறைகளில் வேலை பார்ப்பார்கள். மகர ராசியில் குருவும் ராகுவும் சேர்க்கை பெற்றால் மூத்த சகோதரர்களை விட சகோதரிகள் மிகுந்த அனுசரணையாக இருப்பார்கள்.
வசதிகள் தேடி வரும்: கும்ப ராசியில் குருவும் ராகுவும் இணைந்திருந்தால் சிலர் யோகா மாஸ்டர்களாக இருப்பார்கள். பழைய எதிரிகளை மறக்க மாட்டார்கள். வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு உரிய பரிகாரங்களைச் செய்து வழிபட்டால் நன்மைகள் ஏற்படும். மீனம் ராசியில் குருவும் ராகுவும் சேர்ந்திருந்தால் அக்கு வேறு ஆணி வேறாக எதையும் அலசுவார்கள். அடிப்படையான வாழ்க்கை விஷயங்கள் அனைத்தும் இவர்களுக்கு இயல்பிலேயே அமைந்துவிடும்.
குரு சண்டாள தோஷம்: தோஷம் நீங்க வேண்டும் என்றால், குரு மற்றும் ராகு சாந்தி பாராயணம் செய்ய வேண்டும். இது தவிர, பெற்றோருக்கு சேவை செய்ய வேண்டும். வீட்டில் அல்லது கோவிலில் விஷ்ணுவை வழிபடுவது குரு சண்டாள தோஷத்தின் எதிர்மறை விளைவுகளை குறைக்கிறது. திங்கட்கிழமை இரண்டு முகம் ருத்ராட்சம் அணிவதும் நன்மை தரும். மேலும் விநாயகப் பெருமானை தொடர்ந்து வழிபடுவதால் குரு சண்டாள தோஷம் நீங்கும். குரு மந்திரம் 'ஓம் ப்ரம் பிரிம் ப்ரௌன் சஹ குர்வே நமஹ' என்ற மந்திரத்தை தினமும் உச்சரிக்க வேண்டும். வீட்டில் வாழை கன்றை நட்டு தினமும் வழிபடுவது சண்டள யோகத்தில் இருந்து நிவாரணம் பெற மிகவும் சிறந்த வழியாகும். இது தவிர ராகு மந்திரங்களை தொடர்ந்து உச்சரிக்கவும்.
தானம் செய்யுங்கள்: குரு பகவானுக்கு மிகவும் பிரியமான தானியமான கொண்டைக்கடலையை தானம் செய்வதால் எதிர்மறை கர்ம தாக்கங்களைக் குறைத்து உங்கள் கனவுகள், ஆசைகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்றலாம். ஏழை எளியோருக்கு மஞ்சள் நிற ஆடை தானம் செய்யலாம். மஞ்சள் நிறம் குருவின் ஆற்றலைக் குறிக்கின்றது. குருவிற்கு பிரியனமான பொருட்களை ஏழை எளியோருக்கு தானம் செய்வதன் மூலம் உறவில் நல்லிணக்கம், வாழ்வில் வளம் வெற்றி மற்றும் நல்ல ஆரோக்கியம் கிட்டும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications